வியாழன், 17 செப்டம்பர், 2015

யுவன் சங்கர் ராஜா

 30 நாள் 30 இசை -நாள் 30


யுவன் சங்கர் ராஜா ..


இளையராஜாவின் இளைய மகன் . 16 வயதில் அரவிந்தன் என்ற படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். முதல் ஹிட் பூவெல்லாம் கேட்டுப்பார் . அண்ணன் கார்த்திக் ராஜா பெரிதாக சாதிக்காத நிலையில் யுவன் சில ஆண்டுகள் கலக்கினார் . இரண்டு திருமண வாழ்க்கைகள் தோல்வியில் முடிந்த நிலையில் கீழக்கரையை சேர்ந்த ஜப்ருன் நிஹார் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். மதம் மாறி தன பெயரை அப்துல் கலீக் என மாற்றிக் கொண்டார்.

100 படங்களுக்கு மேல் இசை ..
பாடல்களும் பாடியுள்ளார் ..
ராம் படத்திற்காக சர்வதேச விருது ..
பிலிம்பேர் , தமிழக அரசு விருது , விஜய் அவார்ட்ஸ் , விகடன் விருது .. தலா ஒரு முறை ..

ஹிட் படங்கள் : 7ஜி ரெயின்போ காலனி , காதல் கொண்டேன் , பருத்திவீரன் , யாரடி நீ மோகினி , அவன் இவன் ...

---------------------------------------------------
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது

ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது

பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது

உலகத்தில் உள்ள பொய்களெல்லாம்
அட புடவை கட்டி பெண்ணானது

புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்

சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்.

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை

கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

#கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை

ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
------------------------------------------------
பாடல் : நா.முத்துக்குமார்
பாடகர் : கார்த்திக்