30 நாள் 30 இசை - நாள் 29
(ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு )
GV பிரகாஷ்குமார்
2006 ஆம் ஆண்டு வசந்தபாலனின் ''வெயில்'' படம் மூலம் அறிமுகமான GV.பிரகாஷ்குமார், இசைப்புயல் AR ரஹ்மான் அவர்களின் சகோதரி பாடகி AR.ரய்ஹானாவின் புதல்வர். இசை துறையில் நுழைய மாமா காரணமாக இருந்தாலும் இன்று தனக்கென தனி அடையாளம் உருவாக்கி விட்டார்.
4 வயதில் சிக்கு புக்கு ரயிலே என பாடகராக துவங்கி ...இசை, பாடகர் , தயாரிப்பாளர் என துவங்கி இன்று 3 படங்களில் கதாநாயகன் என பல அவதாரம் எடுக்கிறார். பள்ளி பருவ தோழி பாடகி சைந்தவியுடன் கடந்த ஆண்டு காதல் திருமணம் .
40 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ஒரு பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். பென்சில் , திரிஷா இல்லனா திவ்யா , டார்லிங் என... மூன்று படங்கள் இவர் நடிப்பில் விரைவில் வெளிவருகிறது.
ஹிட் படங்கள் : வெயில் , பொல்லாதவன் , ஆயிரத்தில் ஒருவன் , ஆடுகளம் ,தெய்வ திருமகள் , மயக்கம் என்ன , பரதேசி ...
________________________________
வார்த்தை தேவை இல்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதை இன்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூ பூக்குதே
பூக்கள் பூக்கும் தருணம்- ஆருயிரே
பார்த்த தாரும் இல்லயே
புலரும் காலை பொழுதை- முழு மதியும்
பிரிந்து போவதில்லயே
நேற்றுவரை நேரம் போகவில்லயே
உனது அருகே நேரம் போதவில்லயே
எதுவும் பேசவில்லயே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லயே
இது எதுவோ…
_____________________________
படம் : மதராஸப்பட்டினம்
பாடல் : நா.முத்துகுமார்
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ், ஆண்ட்ரியா, ஹரிணி , ரூப்குமார் ரத்தோர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக