சனி, 11 ஜூன், 2016

பிதாமகர்கள்

30 நாள் 30 இசை - நாள் 39


பிதாமகர்கள் ...


தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் ( 1931 ) க்கு இசை அமைத்தவர் பாஸ்கரதாஸ். அது முதல் இப்போது கபாலிக்கு இசை அமைக்கும் சந்தோஷ் நாராயணன் வரை நூற்றுக் கணக்கானவர்கள் தமிழ் திரையிசையில் பங்களித்து இருக்கிறார்கள். நானும் கடந்த 38 பதிவுகளில் இவர்களை குறிப்பிட்டு இருக்கிறேன்.

இருந்தாலும் , தமிழ் இசை என்றால் நினைவிற்கு வருபவர்கள் மூவர் தான். ஒருவர் தமிழ் திரை இசையின் அடித்தளம் . மெல்லிசை மன்னர் MS. விஸ்வநாதன் அய்யா அவர்கள். ராமமூர்த்தி அவர்களுடன் இணைந்தும் , தனியாகவும் சுமார் 3000 படங்களுக்கு இசை அமைத்த மாமேதை . தமிழ் பேசும் மக்களுக்கு இசை என்றால் என்னவென அறிமுகப் படுத்தியவர் MSV அய்யா அவர்கள்.

இரண்டாமவர் இசைஞானி இளையராஜா அவர்கள் . MSV அடித்தளம் போட்டார் என்றால் , அதை கோவிலாகவும் , கோபுரமாகவும் கட்டியவர் இசைஞானி அவர்கள் . அன்னக்கிளி முதல் தாரை தப்பட்டை வரை அவர் செதுக்கியது 1000 இசை சரித்திரம். ஹிந்தி பாடல் கொண்டிருந்தவர்களை தமிழ் பாட்டு கேட்கவைத்தவர் . தமிழிசையை உலக அளவில் கொண்டு சென்றவர்.

மூன்றாமவர் இசைப்புயல் AR. ரஹ்மான் . MSV யும் , ராஜாவும் கட்டிய கோபுரத்தில் மகுடமாய் ஜொலிப்பவர். 16 வயதில் புன்னகை மன்னனில் ராஜாவுக்கு கீபோர்ட் வாசிக்க தொடங்கி , இன்று உலக சினிமாக்களில் கோலோசுகிறார். நம் இசையை ஆஸ்கார் வரை கொண்டு சென்றவர்.

ராஜா ரசிகர்களுக்கு ரஹ்மானையோ , MSV ரசிகர்களுக்கு ராஜாவையோ பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ரஹ்மான் சொன்னது போல " ஆஸ்கார் என்பது பரிச்சை எழுதுவது போல . நான் அந்த விதிக்கு உட்பட்டு இசை அமைத்தேன் . ஆனால் MSV , ராஜாவெல்லாம் ஞானிகள் . அவர்களுக்கு ஆஸ்கார் கொடுத்திருந்தால் 100 விருதுகள் கொடுத்திருக்க வேண்டும்."

இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் நிறைய எழுதவேண்டும் . ராஜாவின் இசையை PHD அளவுக்கு ஆராயும் நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே போது எழுதுவேன். இப்போதைக்கு MSV , ராஜா கூட்டணியில் ஒரு பாடல் ....
___________________________________
மொழிகள் வெவ்வேறு
பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக்
கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது

மூங்கிலிலை மோதி வரும்
காற்றும் இசை தான் தராதோ...
மூன்று தமிழ் வாசமும்
நாடுப் புறப் பாடலில்
புதுப் புனல் போலே வராதோ...

‪#‎வண்ண‬ வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு

ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்
_________________________________
படம் : செந்தமிழ் பாட்டு
பாடல் : வாலி
பாடகர் : ஜிக்கி அம்மா

வியாழன், 9 ஜூன், 2016

ஓரிரு படங்களுக்கு இசை அமைத்தவர்கள்

30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் 38


ஓரிரு படங்களுக்கு இசை அமைத்தவர்கள்

தமிழ் சினிமா இசையில் எத்தனையோ ஜாம்பவான்கள் கொடிகட்டி பறந்தார்கள். இவர்களுக்கு மத்தியில் நுழைந்து , ஒரு சில படங்களுக்கு மட்டும் இசை அமைத்து சென்றவர்கள் நிறைய பேர்.

இதில் சில பேர் மிகுந்த திறமைசாலிகளாக இருந்தும் ஏதோ சில காரணங்களால் அதன் பிறகு காணாமல் போய்விட்டார்கள். சிலர் வேறு மொழிக்கு போய்விட்டார்கள். சிலர் இப்போது வளரும் இசை அமைப்பாளர்கள். இருப்பினும் அவர்கள் இசை அமைத்த சில பாடல்கள் மூலம் நம் நெஞ்சில் வாழ்கிறார்கள் .

அவர்களைப் பற்றிய சிறிய அறிமுகம்..

1.தேவேந்திரன் (வேதம் புதிது )
2. SS.குமரன் ( பூ , களவாணி )
3. AR. ரைஹானா ( மச்சி , காதலாகி )
4. சுருதிஹாசன் ( உன்னைப் போல் ஒருவன் )
5. சுரேஷ் பீட்டர்ஸ் ( கூலி , தென்காசிப் பட்டணம் )

6. கார்த்திக் ( அரவான் )
7. சங்கர் இஸான் லாய் ( ஆளவந்தான் )
8. அருள்தேவ் ( பட்டா பட்டி , கத்துக்குட்டி )
9. SS. அருணகிரி ( கோலிசோடா , சண்டிவீரன் )
10. ஹிப்பாப் தமிழா ( தனி ஒருவன் )

11. கலோனியல் கசின்ஸ் ( மோதி விளையாடு , சிக்குபுக்கு )
12. தேவன் ( பலே பாண்டியா )
13. FS பைஸல் ( நியூட்டனின் 3ஆம் விதி )
14. கிரிநாத் ( கருடா )
15. ஜெஸ்சி கிப்ட் ( பட்டாளம் )

16. லியோன் ஜேம்ஸ் ( கோ 2 , காஞ்சனா 2 )
17. மகேஷ் பஞ்சநாதன் ( சூரதேங்காய் , காயல் )
18. நிவாஸ் பிரசன்னா ( தெகிடி , சேதுபதி )
19. பிரவீன்மணி ( ஒற்றன் , தூத்துக்குடி , பயணம் )
20. டிரம்ஸ் சிவமணி ( அரிமா நம்பி , கணிதன் )

21. பிரேம்ஜி அமரன் ( என்னமோ நடக்குது , மாங்கா )
22. RP பட்நாயக் ( ஜெயம் )
23. சத்யா ( எங்கேயும் எப்போதும் , தீயா வேலை செய்யணும் கொமாரு )
24. செல்வகணேஷ் ( வெண்ணிலா கபடிக் குழு , துரோகி)
25. சவுந்தர்யன் ( சிந்துநதிப் பூ )

26. கஸ்தூரிராஜா ( இது காதல் வரும் பருவம் )
27. K.பாக்யராஜ் ( இது நம்ம ஆளு , பவுனு பவுனு தான் , ஆராரோ ஆரிரரோ )
28. பவதாரிணி ( வெள்ளச்சி )
29. ஹிமேஷ் ரேஷ்மியா ( தசாவதாரம் )
30. அச்சு ராஜாமணி ( மாலைப்பொழுதின் மயக்கத்திலே , உறுமீன் )

31. ரஞ்சித் பலோட் ( விஐபி )
32.பரணி - ( சார்லிசாப்ளின்,பார்வை ஒன்றே போதுமே )
33. ஆகோஷ் ( ஆனந்த், கோபால், ஷ்யாம்) - அரிச்சந்திரா
34. அனுராதா ஸ்ரீராம் ( பைவ் ஸ்டார் )

35. விஜய் ஆனந்த் - நான் அடிமை இல்லை

36. அரோல் கரோலி - பிசாசு
37. கே - யுத்தம் செய் , முகமூடி , பிஸ்ஸா , 49'O
38. வர்ஷன் - மகளிர்க்காக
39. பாபுகணேஷ் - நாகலிங்கம்
40. ஜெய் - அன்புடன்

41. ரமண கோகுலா - பத்ரி
42. அஸ்லாம் முஸ்தபா - மிட்டா மிராசு
43.பாடகர் சீனிவாஸ், - ஏய் நீ ரொம்ப அழகா இருக்க , கங்காரு
44. ரமேஷ் விநாயகம் - யுனிவர்சிடி , நளதமயந்தி , ராமானுஜன்
45. ராகவ் ராஜா - ஏய் நீ ரொம்ப அழகா இருக்க

46. அப்நிராம் - என்னை தாலாட்ட வருவாளா
47. SP.வெங்கடேஷ் - பீஷ்மர் , வடக்கு வாசல்
48. மகேஷ் - வானம் வசப்படும் , நம்மவர்
49. சரெத் - ஜூன் R , 180
50. நிரு - கலாபக் காதலன் , ராமேஸ்வரம்

51.தரண் - பாரிஜாதம் , சித்து +2 , போடா போடி
52. ஜான் பீட்டர் - மதுரை சம்பவம் , சவுக்கார்பேட்டை
53. MV. யுகேந்திரன் - வீரமும் ஈரமும்
54. ராஜேஷ் வைத்யா - வேகம்
55. மனு ரமேசன் - பிடிச்சிருக்கு , ராட்டினம்

56. கணேஷ் ராகவேந்திரா - ரேணிகுண்டா , மதில் மேல் பூனை


இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.. இவர்களின் இசையும் கணக்கில் கொள்வோம்...