30 நாள் 30 இசை - நாள் 39
பிதாமகர்கள் ...
தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் ( 1931 ) க்கு இசை அமைத்தவர் பாஸ்கரதாஸ். அது முதல் இப்போது கபாலிக்கு இசை அமைக்கும் சந்தோஷ் நாராயணன் வரை நூற்றுக் கணக்கானவர்கள் தமிழ் திரையிசையில் பங்களித்து இருக்கிறார்கள். நானும் கடந்த 38 பதிவுகளில் இவர்களை குறிப்பிட்டு இருக்கிறேன்.
இருந்தாலும் , தமிழ் இசை என்றால் நினைவிற்கு வருபவர்கள் மூவர் தான்.
ஒருவர் தமிழ் திரை இசையின் அடித்தளம் . மெல்லிசை மன்னர் MS. விஸ்வநாதன்
அய்யா அவர்கள். ராமமூர்த்தி அவர்களுடன் இணைந்தும் , தனியாகவும் சுமார் 3000
படங்களுக்கு இசை அமைத்த மாமேதை . தமிழ் பேசும் மக்களுக்கு இசை என்றால்
என்னவென அறிமுகப் படுத்தியவர் MSV அய்யா அவர்கள்.
இரண்டாமவர் இசைஞானி இளையராஜா அவர்கள் . MSV அடித்தளம் போட்டார் என்றால் , அதை கோவிலாகவும் , கோபுரமாகவும் கட்டியவர் இசைஞானி அவர்கள் . அன்னக்கிளி முதல் தாரை தப்பட்டை வரை அவர் செதுக்கியது 1000 இசை சரித்திரம். ஹிந்தி பாடல் கொண்டிருந்தவர்களை தமிழ் பாட்டு கேட்கவைத்தவர் . தமிழிசையை உலக அளவில் கொண்டு சென்றவர்.
மூன்றாமவர் இசைப்புயல் AR. ரஹ்மான் . MSV யும் , ராஜாவும் கட்டிய கோபுரத்தில் மகுடமாய் ஜொலிப்பவர். 16 வயதில் புன்னகை மன்னனில் ராஜாவுக்கு கீபோர்ட் வாசிக்க தொடங்கி , இன்று உலக சினிமாக்களில் கோலோசுகிறார். நம் இசையை ஆஸ்கார் வரை கொண்டு சென்றவர்.
ராஜா ரசிகர்களுக்கு ரஹ்மானையோ , MSV ரசிகர்களுக்கு ராஜாவையோ பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ரஹ்மான் சொன்னது போல " ஆஸ்கார் என்பது பரிச்சை எழுதுவது போல . நான் அந்த விதிக்கு உட்பட்டு இசை அமைத்தேன் . ஆனால் MSV , ராஜாவெல்லாம் ஞானிகள் . அவர்களுக்கு ஆஸ்கார் கொடுத்திருந்தால் 100 விருதுகள் கொடுத்திருக்க வேண்டும்."
இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் நிறைய எழுதவேண்டும் . ராஜாவின் இசையை PHD அளவுக்கு ஆராயும் நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே போது எழுதுவேன். இப்போதைக்கு MSV , ராஜா கூட்டணியில் ஒரு பாடல் ....
___________________________________
மொழிகள் வெவ்வேறு
பாடல் கொண்டாலும்
இனிமை ஒன்றானது
தமிழர் பண்பாட்டைக்
கூறும் பாட்டுக்கு
தமிழே கண் போன்றது
மூங்கிலிலை மோதி வரும்
காற்றும் இசை தான் தராதோ...
மூன்று தமிழ் வாசமும்
நாடுப் புறப் பாடலில்
புதுப் புனல் போலே வராதோ...
#வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்
_________________________________
படம் : செந்தமிழ் பாட்டு
பாடல் : வாலி
பாடகர் : ஜிக்கி அம்மா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக