வியாழன், 12 மே, 2016

சபேஷ் - முரளி

30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் - 36




நிறைய சாதித்து இருந்தும் சிலர் அதிகம் புகழ் பெறாமலே போய் விடுவார்கள். அதற்கு இவர்களும் ஒரு உதாரணம். தேனிசைத் தென்றல் தேவாவின் உடன்பிறந்த சகோதரர்களான இவர்கள் இருவரும் தேவா இசை அமைத்த 300 படங்களுக்கு மேல் இசை உதவி என்ற பெயரில் பின்னணி இசை அமைத்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டு முதல் முறையாக KS ரவிகுமாரின் சமுத்திரம் படத்திற்கு இருவரும் இசை அமைத்தனர். இதுவரை சுமார் 30 படங்களுக்கு இருவரும் இசை அமைத்துள்ளனர்.

தேவாவுடன் இணைந்து நிறைய பக்தி பாடல் கேசட்களை வெளியிட்டுள்ளனர். ஒரேநாளில் ஒரு படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் அளவுக்கு திறமையானவர்கள். இதனால்   AR.ரஹ்மான் இசை அமைத்த சில படங்களுக்கு ( ஜோடி , அழகிய தமிழ் மகன் ..) பின்னணி இசை மட்டும் சபேஷ் முரளி அமைத்துள்ளனர். ஜீவி.பிரகாஷ் இசை அமைத்த அங்காடி தெரு படத்திற்கு பின்னணி இசை இவர்களே.

சில பாடல்களை பாடியுள்ள இவர்கள் தற்போது சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்கள்.

ஹிட் படங்கள் :
சமுத்திரம் , பொக்கிஷம் , தவமாய் தவமிருந்து , இம்சை அரசன் 23ஆம் புலிகேசி , எங்கள் ஆசான் , மாயாண்டி குடும்பத்தார்....
__________________________________________
பள்ளி கூடம் நா போகையிலே
பம்பரமா தினம் ஓடுவேண்டா
வாத்தியார நா பாக்கையில
வணக்கம் சொல்லி நல்ல பாடுவேண்டா

அந்த கால படிப்பையெல்லாம்
படிக்க தாண்டா பார்த்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம
பரீட்சயில தோற்றேன்


நா படிக்க நேனச்சதேல்லாம்
நீ படிக்கணும்
என்னுடைய கவலையெல்லாம்
நீங்க போக்கணும்

உங்கள பெத்ததே சந்தோசம்
நா உங்கள பெத்ததே சந்தோசம்
சிங்கத்த பெத்ததே சந்தோசம் ரெண்டு
சிங்கத்த பெத்ததே சந்தோசம்

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே
அது யாரு ஒங்க அப்பா

ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே
அது யாரு ஒங்க அப்பா ......
_____________________________________________
படம் : பொக்கிஷம்
பாடல் : சினேகன்
பாடகர் : சபேஷ் ( முரளி ) , ஜெயக்குமார்

சந்தோஷ் நாராயணன்

30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் 35


சந்தோஷ் நாராயணன்


2012 ஆம் ஆண்டு அட்டகத்தி மூலம் அட்டகாசமாக அறிமுகமான சந்தோஷ் நாராயணின் சொந்த ஊர் திருச்சி . கல்லூரி முடித்த பிறகு AR ரஹ்மானிடம் சவுண்ட் ரெகார்டிங் இஞ்சினியராக பணியாற்றினார்.

அட்டகத்தியில் கானா பாலாவை அறிமுகம் செய்தார். இதுவரை 20 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இவர் நாளைய இயக்குனர்களின் தோழன் . கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி , ரஞ்சித் இவர்களின் எல்லா படமும் சந்தோஷ் தான் .

சந்தோஷ் நாராயணன் இசையில் ஜிகர்தண்டாவில் பாடியவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மீனாட்சி ஐயர் . கணவரைப் பிரிந்தவர் . சந்தோஷ் நாராயணன் இசையில் தொடர்ந்து பாடி மீனாட்சியை சந்தோஷ் திருமணம் செய்துகொண்டார் . இவருக்கு 17 வயதில் தீ (Dhee ) என்கிற  தீக்ஷிதா என்ற மகள் உண்டு. சந்தோஷின் வளர்ப்பு மகளாகிவிட்ட ( 32 வயது சந்தோஷ் க்கு 17 வயதில் மகள் )  தீட்சிதா இறுதிசுற்றில் வரும் ஏ சண்டக்காரா , உசுரு நரம்பில .. பாடல்களை பாடினார்.

விஜயின் 60 வதாவது படத்திற்கு இசை அமைக்கும் சந்தோஷ் நாராயணின் மைல்கல் சூப்பர் ஸ்டாரின் கபாலி ... டிரைலரே 1 கோடி ஹிட் என்பதால் , மிக கவனமாக இசை அமைத்துள்ளார் .

ஹிட் படங்கள் : அட்டகத்தி , சூதுகவ்வும் , ஜிகர்தண்டா , குக்கூ , 36 வயதினிலே , இறுதிசுற்று
______________________________________
வாடகைக்கு காதல் வாங்கி
வாழவில்ல யாரும்
என்னை மட்டும் வாழ சொல்லாதே
உடம்புக்குள்ள உசுரவிட்டு
போகசொல்லு நீதான்
உன்னைவிட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சியெல்லாம்
உந்தன் பூமுகம்
அது எந்தன் நியாபகம்

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோளக்காட்டு பொம்மைக்கொரு
சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா
கையில் ரேகையில்லை
கண்ணுக்குள்ள இப்ப
கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
வந்து சேரு
___________________________________
படம் : மெட்ராஸ்
பாடல் : கபிலன்
பாடகர் :  பிரதீப்

ஞாயிறு, 8 மே, 2016

ஜேம்ஸ் வசந்தன்

30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் 34


ஜேம்ஸ் வசந்தன்


2008 ஆம் ஆண்டு தன் மாணவன் சசிகுமாரின் "சுப்ரமணியபுரம்" படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார் ஜேம்ஸ் வசந்தன் . சொந்த ஊர் திருச்சி. கல்லூரி வரை திருச்சியில் படித்த ஜேம்ஸ் வசந்தன் ,சென்னை பல்கலையிலும் டிரினிடியிலும் இசை பயின்றார். பிறகு கொடைக்கானலில் உள்ள பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிந்த போது அவரின் மாணவர் சசிகுமார். சசிகுமார் படம் இயக்கிய போது தன ஆசிரியரையே இசை அமைக்கவைத்தார்.

இதுவரை 15 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். வானவில் வாழ்க்கை என்ற படத்தை இயக்கினார் . சிறந்த தமிழ் ஆர்வலர். அழகாக தமிழை உச்சரிப்பவர். சினிமாவுக்கு வரும் முன் வாசனை என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். சுமார் 300 கிருஸ்துவ பக்தி கேசட்கள் வெளியிட்டுள்ளார். சன் டிவி , மக்கள் டிவி ஆகியவற்றில் நிகழ்சிகளை நடத்தினார் .

விஜய் டிவியில் ஒரு வார்த்தை ஒரு லட்சம் அவரின் புகழ் பெற்ற நிகழ்ச்சி. குடும்ப வாழ்க்கை பிரச்னை ( வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் மனைவி புகார் செய்ய கைதாகி சிறை சென்றார் ) அவரால் அதிக படங்கள் இசை அமைக்கமுடியவில்லை .

ஹிட் படங்கள் : சுப்ரமணியபுரம்  , நாணயம் , ஈசன் , பசங்க ..

______________________________________

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
-
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய், போதத்தென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு
தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் ...
______________________________________
படம் : சுப்ரமணியபுரம்
பாடல் : யுகபாரதி
பாடகர் : பெல்லி ராஜ் , தீபா மரியம்

சனி, 7 மே, 2016

பாலபாரதி

30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் 33


பாலபாரதி


1993 ஆம் ஆண்டு தலைவாசல் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார் . அதே ஆண்டு அமராவதியில் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் கொடுத்தார். இந்த இரண்டு படங்களுமே பாலபாரதியின் இசைக்காக ஓடியவை .

இந்த இரண்டு படங்களிலும் அறிமுகமான  இயக்குனர்  செல்வா , தயாரித்த சோழா பொன்னுரங்கம் , தலைவாசல் விஜய் , அஜித் , சங்கவி ..எல்லோரும் இன்று வரை திரையில் உள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு அறிமுகம் கொடுத்த பாலபாரதி காணாமல் போய்விட்டார்.

ஏன் அவர் அதன் பின் இசை அமைக்கவில்லை என தெரியவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் இயக்குனர் மகேந்திரன் சாசனம் படத்தில் ( 2006 ) இசையமைக்க வைத்தார். இயக்குனர் செல்வா தன் 25 வது படத்தில் ( நாங்க , 2014 ) மீண்டும் இசையமைக்க வைத்தார்.

அவர் தொடர்ந்து இசை அமைத்திருந்தால் கண்டிப்பாக நிறைய நல்ல பாடல்கள் கிடைத்திருக்கும் .
ஹிட் பாடல்கள் :
புத்தம் புது மலரே...
அதிகாலை காற்றே நில்லு ..
உன்னை தொட்ட தென்றல் ஒன்று...
__________________________________

சில்வண்டு என்பது
சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால்
செடியென்ன கேள்வி கேட்குமா

வண்டாடும் காதலைக்
கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால்
அது ரொம்பப் பாவம் என்பதா

வாழாத காதல் ஜோடி
இம்மண்ணில் கோடியே
வாழாத பேர்க்கும் சேர்த்து
வாழ்வோமே தோழியே

வானம் மண்ணும் பாடல் சொல்லி நம் தேரிலே

தாஜ்மஹால் தேவையில்லை
அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே

இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும்
தொடரும் உறவிதுவோ..
__________________________________
படம் : அமராவதி
பாடல் : கவிஞர் வாலி
பாடகர் : SPB , S.ஜானகி

வியாழன், 5 மே, 2016

தாஜ் நூர்

30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் 32


தாஜ் நூர்


பழம்பெரும் இசை அமைப்பாளர் கோவர்த்தன் அவர்களுக்குப் பிறகு எங்கள் சேலத்தின் பெருமை மிகு அறிமுகம். சேலம் பாரதி வித்யாலயா மற்றும் பாவடி ஆண்கள் பள்ளியில் படித்த தாஜ்நூர் , கல்லூரியை சேலம் அரசு கலைக் கல்லூரியில் படித்தார் .

1996 ஆம் ஆண்டு AR ரஹ்மானிடம் உதவியாளராக சேர்ந்த தாஜ் நூர் பாண்டிராஜின் வம்சம் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார் . சுமார் 15 படங்களுக்கு இதுவரை இசை அமைத்துள்ள தாஜ்நூர் , சினிமாவைத் தாண்டி சமூக அக்கறை உள்ள மனிதர்.

பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு வருந்தி அதை பாடலாக வெளியிட்டார். சேலம் நண்பர் ஈசன் இளங்கோ அவர்கள் கொண்டாடிய தமிழர் பொங்கல் விழாவிற்காக ஈசன்  இளங்கோ எழுதிய  பாடலை வேல்முருகன் குரலில் வெளியிட்டார்.

இப்போது பிரபலமாக உள்ள புதிய சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்திற்கு இசை இவரே.மேலும் பல படங்களுக்கு இசை அமைத்து நல்ல பாடல்களைத் தர , சேலம் மண்ணின் மைந்தனாக வாழ்த்துகிறேன் . 

படங்கள் ..
வம்சம் ,ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி , எத்தன் , ஸ்ட்ராபெர்ரி 
______________________________________

விட்டு விட்டு வெயிலும் அடிக்கிது
விட்டு விட்டு மழையும் அடிக்கிது
காதல் வந்து வானவில்ல
பாலம் போட்டு அழைக்கிது
தொட்டு தொட்டு பிடிக்கிது
தூண்டி போட்டு இழுக்குது
திட்டி திட்டி காலு ரெண்டும்
உன்னைதேடி நடக்குது

#மருதாணி பூவப்போல
மருதாணி பூவப்போல
குறு குறு குறு
வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சிலு
சூரக்காத்து நெஞ்சிக்குள்ள

மருதாணி பூவப்போல
மருதாணி பூவப்போல
குறு குறு குறு
வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சிலு
சூரக்காத்து நெஞ்சிக்குள்ள
மருதாணி பூவப்போல....
________________________________________
படம் : வம்சம்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : முகேஷ், சர்முகி