30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் 33
பாலபாரதி
1993 ஆம் ஆண்டு தலைவாசல் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார் . அதே ஆண்டு அமராவதியில் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் கொடுத்தார். இந்த இரண்டு படங்களுமே பாலபாரதியின் இசைக்காக ஓடியவை .
இந்த இரண்டு படங்களிலும் அறிமுகமான இயக்குனர் செல்வா , தயாரித்த சோழா பொன்னுரங்கம் , தலைவாசல் விஜய் , அஜித் , சங்கவி ..எல்லோரும் இன்று வரை திரையில் உள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு அறிமுகம் கொடுத்த பாலபாரதி காணாமல் போய்விட்டார்.
ஏன் அவர் அதன் பின் இசை அமைக்கவில்லை என தெரியவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பின் இயக்குனர் மகேந்திரன் சாசனம் படத்தில் ( 2006 ) இசையமைக்க வைத்தார். இயக்குனர் செல்வா தன் 25 வது படத்தில் ( நாங்க , 2014 ) மீண்டும் இசையமைக்க வைத்தார்.
அவர் தொடர்ந்து இசை அமைத்திருந்தால் கண்டிப்பாக நிறைய நல்ல பாடல்கள் கிடைத்திருக்கும் .
ஹிட் பாடல்கள் :
புத்தம் புது மலரே...
அதிகாலை காற்றே நில்லு ..
உன்னை தொட்ட தென்றல் ஒன்று...
__________________________________
சில்வண்டு என்பது
சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால்
செடியென்ன கேள்வி கேட்குமா
வண்டாடும் காதலைக்
கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால்
அது ரொம்பப் பாவம் என்பதா
வாழாத காதல் ஜோடி
இம்மண்ணில் கோடியே
வாழாத பேர்க்கும் சேர்த்து
வாழ்வோமே தோழியே
வானம் மண்ணும் பாடல் சொல்லி நம் தேரிலே
தாஜ்மஹால் தேவையில்லை
அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும்
தொடரும் உறவிதுவோ..
__________________________________
படம் : அமராவதி
பாடல் : கவிஞர் வாலி
பாடகர் : SPB , S.ஜானகி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக