30 நாள் 30 இசை - நீட்டிப்பு - நாள் - 36
நிறைய சாதித்து இருந்தும் சிலர் அதிகம் புகழ் பெறாமலே போய் விடுவார்கள். அதற்கு இவர்களும் ஒரு உதாரணம். தேனிசைத் தென்றல் தேவாவின் உடன்பிறந்த சகோதரர்களான இவர்கள் இருவரும் தேவா இசை அமைத்த 300 படங்களுக்கு மேல் இசை உதவி என்ற பெயரில் பின்னணி இசை அமைத்துள்ளனர்.
2001 ஆம் ஆண்டு முதல் முறையாக KS ரவிகுமாரின் சமுத்திரம் படத்திற்கு இருவரும் இசை அமைத்தனர். இதுவரை சுமார் 30 படங்களுக்கு இருவரும் இசை அமைத்துள்ளனர்.
தேவாவுடன் இணைந்து நிறைய பக்தி பாடல் கேசட்களை வெளியிட்டுள்ளனர். ஒரேநாளில் ஒரு படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் அளவுக்கு திறமையானவர்கள். இதனால் AR.ரஹ்மான் இசை அமைத்த சில படங்களுக்கு ( ஜோடி , அழகிய தமிழ் மகன் ..) பின்னணி இசை மட்டும் சபேஷ் முரளி அமைத்துள்ளனர். ஜீவி.பிரகாஷ் இசை அமைத்த அங்காடி தெரு படத்திற்கு பின்னணி இசை இவர்களே.
சில பாடல்களை பாடியுள்ள இவர்கள் தற்போது சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்கள்.
ஹிட் படங்கள் :
சமுத்திரம் , பொக்கிஷம் , தவமாய் தவமிருந்து , இம்சை அரசன் 23ஆம் புலிகேசி , எங்கள் ஆசான் , மாயாண்டி குடும்பத்தார்....
__________________________________________
பள்ளி கூடம் நா போகையிலே
பம்பரமா தினம் ஓடுவேண்டா
வாத்தியார நா பாக்கையில
வணக்கம் சொல்லி நல்ல பாடுவேண்டா
அந்த கால படிப்பையெல்லாம்
படிக்க தாண்டா பார்த்தேன்
அந்த கணக்கு பாடம் தெரியாம
பரீட்சயில தோற்றேன்
நா படிக்க நேனச்சதேல்லாம்
நீ படிக்கணும்
என்னுடைய கவலையெல்லாம்
நீங்க போக்கணும்
உங்கள பெத்ததே சந்தோசம்
நா உங்கள பெத்ததே சந்தோசம்
சிங்கத்த பெத்ததே சந்தோசம் ரெண்டு
சிங்கத்த பெத்ததே சந்தோசம்
ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே
அது யாரு ஒங்க அப்பா
ஒரே ஒரு ஊருக்குள்ளே
ஒரே ஒரு அம்மா அப்பா
ஒத்த புள்ள பெத்தாங்கலே
அது யாரு ஒங்க அப்பா ......
_____________________________________________
படம் : பொக்கிஷம்
பாடல் : சினேகன்
பாடகர் : சபேஷ் ( முரளி ) , ஜெயக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக