ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மனோஜ்‬ கியான்

30 நாள் 30 இசை - நாள் 11

‪‎மனோஜ்‬ கியான் 

 

1981 இல் ரூஹி ( Roohi ) என்ற ஹிந்தி படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான மனோஜ் கியான் அவர்களுக்கு தமிழில் முதல் படம் ஊமை விழிகள் ( 1986 ) . முதல் படத்திலேயே வித்தியாசமான இசையால் திரும்பி பார்க்க வைத்தார். தோல்வி நிலையென நினைத்தால் பாடலும் , அந்த கிளைமாக்ஸ் பின்னணி இசையும் இன்றும் மறக்க முடியாது.
குறைந்த படங்களுக்கே இசை அமைத்திருந்தாலும் ( தமிழில் 12 , ஹிந்தியில் 4 ) அத்தனையும் ஹிட் .
உன்னை தினம் தேடும் தலைவன் , ராத்திரி நேரத்து பூஜையில் , சோதனை தீரவில்லை , அந்திநேர தென்றல் காற்று....
ஹிட் படங்கள் : தாய்நாடு , செந்தூர பூவே , உரிமை கீதம் , உழவன் மகன் , ஊமைவிழிகள் , இணைந்த கைகள்....
_________________________________________
வெண் பனி போல கண்களில் ஆடும்
மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிங்கே
களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும்
மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிங்கே
களங்கங்கள் இல்லை
அது தானே என்றும் இங்கே
நான் தேடும் எல்லை
‪#‎செந்தூர‬ பூவே இங்கு
தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும்
தேர் கொண்டு வா வா
இரு கரை மீதிலே
தன் நிலை மீறியே
ஒரு நதி போல
என் நெஞ்சம் அலை மோதுதே ...
_________________________________
படம் : செந்தூர பூவே
பாடியவர் : B.S.சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : முத்துலிங்கம்

சனி, 30 ஆகஸ்ட், 2014

தன்ராஜ் மாஸ்டர்

30 நாள் 30 இசை - நாள் 10


#தன்ராஜ் மாஸ்டர்

 


ஒரு படத்திற்கு கூட இசை அமைக்காத  தன்ராஜ் மாஸ்டரை தவிர்த்து விட்டு தமிழ் சினிமா இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறதா...
சென்னை மயிலாப்பூரை ( பூர்வீகம் தஞ்சாவூர் ) சேர்ந்த தன்ராஜ் மாஸ்டர் தமிழ் திரை இசையின் துரோணாச்சாரியார். வெஸ்டர்ன் கிளாசிகல் மியூசிக் எனப்படும் மேற்கத்திய இசை குரு.
இளையராஜா ,கங்கை அமரன் , AR ரஹ்மான் , தேவா , வித்யாசாகர் , மலையாள இசை அமைப்பாளர் ஷ்யாம் ... எல்லோரும் அவரின் பெருமைக்குரிய சீடர்கள்...
இவர்கள் அனைவரும் திரை இசைக்கான அடிப்படை பயிற்சி  , வெஸ்டர்ன் கிளாசிகல் இரண்டையும் தன்ராஜ் மாஸ்டரிடம் பயின்றார்கள். தன் முதன்மை சீடர் ராசையாவை ராஜா என்றே அழைத்தார். பிறகு அன்னகிளியின் போது பஞ்சு அருணாசலம் அவர்கள் இளையராஜா என மாற்றினார்.ரஹ்மான் இவரிடம் அடிப்படை இசை பயின்ற பிறகு லண்டன் ட்ரினிடி இசை பள்ளியில் மேல் படிப்பை படித்தார்.

இசை குறித்து இவர் எழுதியுள்ள இரண்டு நூல்கள் இன்று இசை பயிலும் அனைவருக்கும் பால பாடம் ஆகும். இசை விதி 180 டிகிரி ,  பிரம்ம மேள பிரமாணம்’ என்ற அந்த இரு நூல்கள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

தன்ராஜ் மாஸ்டர் சார்பாக அவரின் சிஷ்யர் இளையராஜாவின் இசையில் இருந்து ஒரு பாடல் ..
_______________________________

 பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை

ஆசை கிளியே
வந்தாயே பண்ணோடு ...

நான் பிறந்த நாளில்
இது நல்ல நாளே ..

சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா ...

கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ ...இங்கு வந்ததாரோ

கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்

அது காற்றானதோ ... தூதானதோ... .
_____________________________________


படம் : கிழக்கே போகும் ரயில்
பாடல் : கண்ணதாசன்
பாடகர் : மலேசியா வாசுதேவன்,S .ஜானகி

T .ராஜேந்தர்

30 நாள் 30 இசை - நாள் 9


T .ராஜேந்தர் 

 


1980 ஆம் ஆண்டு ஒரு தலை ராகத்தில் இசை அமைப்பாளராக , இயக்குனராக , நடிகராக அறிமுகமான ராஜேந்தர் தமிழ் சினிமாவின் அஷ்டாவதானி . இயக்கம் ,நடிப்பு , பாடல் , இசை , நடனம் , உடைகள் , கலை , தயாரிப்பு .. எல்லாவற்றிலும் சாதித்தவர்..

இன்றைய 9 வது நாள் ஸ்பெசல் ராஜேந்தர். அவருக்கும் 9 ஸ்பெசல் தான். முதல் படம் ஒரு தலை ராகம் , கடைசியாக வந்த வீராசாமி தவிர எல்லா பட தலைப்புமே 9 எழுத்துக்களில் இருக்கும்.!

பாடலாசிரியர் ராஜேந்தர் இன்னும் ஸ்பெசல். கம்பனுக்கு இணையான கற்பனை இவர் பாடல்களில் இருக்கும் என்று BH.அப்துல் ஹமீது ஒரு முறை சொன்னார். இன்றைய பாடலை பாருங்கள் . காதலியின் கண்களை இதைவிட அழகாக யாராலும் வர்ணிக்க முடியாது. இன்றைக்கும் TR ஹிட்ஸ் CD விற்பனை ஆகிறது என்கிறார் CD கடை நண்பர்.

ஹிட்ஸ் : ஒரு தலை ராகம் , ரயில் பயணங்களில் , தங்கைக்கோர் கீதம் , மைதிலி என்னை காதலி , என் தங்கை கல்யாணி , ஒரு தாயின் சபதம் ....
____________________________________
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா..
அம்மம்மா

உன் மைவிழிக் குளத்தினில்
தவழ்வது மீனினமோ

கவி கண்டிட மனத்தினில்
கமழ்வது தமிழ்மணமோ

செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும்
உன் காந்த விழிகள்

ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட
ஏதேதோ குயில்கள்

மலையில் நெளியும் மேகக்குழல்கள்
தாகம் தீர்த்திடுமோ

பூவில் மோத பாதம் நோக
நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்

நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
__________________________________

படம் : ரயில் பயணங்களில்
பாடல் : ராஜேந்தர்
பாடகர் : ஜெயச்சந்திரன்

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஆதித்யன்

30 நாள் 30 இசை - நாள் 8


ஆதித்யன்

 

1992 ஆம் ஆண்டு அமரன் படத்தில் அறிமுகமான ஆதித்யன் அவர்களின் சொந்த ஊர் தஞ்சாவூர் . முதல் படத்திலேயே வித்தியாசமான இசை மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்த படத்தில் வெத்தல போட்ட சோக்குல என்ற கானா பாடலை கார்த்திக்கை பாடவைத்தார். பெரிய ஹிட் ஆனது.

50 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள ஆதித்யன் சில பாடல்களை பாடியுள்ளார். 2003 வரை இசை அமைத்த ஆதித்யன் அதன் பிறகு சமையல் கலை வல்லுனராக கலக்கினார். இன்றைக்கும் அவர் சமையல் நிகழ்ச்சிகளை யூ டியூபில் பார்க்கலாம்.

ஹிட் படங்கள் : அமரன் , சீவலப்பேரி பாண்டி , லக்கி மேன் , அசுரன் , மாமன் மகள் ....
__________________________________
அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு
ஏய் மலையே மலையே
மேகத்தை எடுத்து தாவணி நீ போடு

இந்த காடே என் வீடு
என் உறவே என் ஆடு
அட கண்ணீர் சந்தோசம்
அது ரெண்டும் என் பாடு

மழை வந்தாலென்ன
இடி வந்தாலென்ன
நீ துணிஞ்சு விளையாடு
துணிஞ்சு விளையாடு

ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு
________________________________

படம் : சீவலப்பேரி பாண்டி
பாடல் : கே . ராஜேஸ்வர்
பாடகர் : சித்ரா

புதன், 27 ஆகஸ்ட், 2014

சங்கர்‬ கணேஷ்

30 நாள் 30 இசை - நாள் 7

 

சங்கர்‬ கணேஷ்


1964 ஆம் ஆண்டு மகராசி மூலம் அறிமுகமான சங்கர் ,கணேஷ் ... MSV - ராமமூர்த்தி அவர்களுக்கு பிறகு சாதித்த இரட்டை இசை அமைப்பாளர்கள் . இந்திய அளவில் அதிக படங்களுக்கு இசை அமைத்து சாதனை படைத்தவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் ,ஹிந்தி என 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளனர். ராமநாராயணனின் இயக்கத்தில் மட்டும் 50 படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். 1979 இல் சிறந்த இசைக்கான தமிழக அரசு விருது பெற்றனர்.

கணேஷ் அவர்கள் கலைமாமணி விருது பெற்றுள்ளார். 7 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள கணேஷ் 2 படங்களை இயக்கியுள்ளார். கணேஷ் அவர்களைப் பார்த்தே இசை கற்று , இசை அமைப்பாளரானதாக ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.

ஹிட் லிஸ்ட் : ஆட்டுக்கார அலமேலு , டார்லிங் டார்லிங் டார்லிங் , கன்னி பருவத்திலே , எங்க சின்ன ராசா , ஊர் காவலன் , வாழ்க்கை சக்கரம் , நீயா ,விதி , சம்சாரம் அது மின்சாரம் , மூன்று முகம் ...
__________________________________________
அஞ்சு விரல் ஓயாம
கெஞ்சுகிற ஆச ஒண்ணு

பிஞ்சு இது தாங்காது
சொல்லிவிடு நோகுமுன்னு

தோதா அணைச்சபடி தாங்கிப் புடிப்பேன்
பட்டுச்சேலை கசங்காம பாடம் படிப்பேன்

அந்தியில பந்தி வைக்கும் போது
என்ன வரம் வேணுமின்னு கேளு
 அதற்குள்…தாகம் தணிஞ்சிரும்

மாமா‬ உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
____________________________________
படம் : எங்க சின்ன ராசா
பாடல் : வாலி
பாடகர் : SPB , S ஜானகி

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கங்கை அமரன்

30 நாள் 30 இசை - நாள் 6


கங்கை அமரன்


1979 இல் கே.பாக்யராஜின் ''சுவர் இல்லாத சித்திரங்கள்'' மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆன கங்கைஅமரன்.... இசை , பாடலாசிரியர் , இயக்குனர் , தயாரிப்பாளர் ,பாடகர் என தமிழ் திரையின் அனைத்து பகுதியிலும் முத்திரை பதித்து சாதனை புரிந்தவர். இளையராஜாவின் சகோதரர் . இயற் பெயர் அமர்.

''சுவர் இல்லாத சித்திரங்கள்'' முதல் 52 படங்களுக்கு இசை அமைப்பாளராக..... ''செந்தூர பூவே'' பாடல் (16 வயதினிலே) முதல் சுமார் 1000 பாடல்கள் பாடலாசிரியராக...
''கோழி கூவுது'' முதல் 22 படங்கள் இயக்குனராக .. கலக்கியவர் அமரன்.

இசை அமைத்த ஹிட் படங்கள் : சுவர் இல்லாத சித்திரங்கள் , நாளெல்லாம் பௌர்ணமி , வாழ்வே மாயம் , மௌன கீதங்கள் , ருத்ரா ....
________________________________

கூட்டாஞ்சோறு நீபோட
கும்மிப்போட்டு நான் பாட

சொல்லாம கிள்ளாத
வக்கீல் இல்ல வாதாட

வெக்கம் வந்து போராட
என்ன சொல்லி நான் பாட

சொந்தம்தான் மாறாது
ஊத்துத்தண்ணி ஆத்தோட

மோகத்த தூண்டாதீங்க
முந்தானை தாண்டாதீங்க

வாங்க அத வாங்க
எம்மடிமேல உக்காருங்க

நீதானா நெசந்தானா
நிக்கவச்சி நிக்கவச்சி பாக்குறே

ஆத்தாடி மடிதேடி
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறே
__________________________________

படம் : நாளெல்லாம் பௌர்ணமி
பாடல் : கங்கை அமரன்
பாடகர் : யேசுதாஸ் , சித்ரா

SA ராஜ்குமார்

30 நாள் 30 இசை - நாள் 5


SA ராஜ்குமார்


1987 இல் சின்ன பூவே மெல்லப் பேசு படத்தின் மூலம் அறிமுகமான SA ராஜ்குமார் இன்று சரியாக 50 முடிந்து 51வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். (23.08.1964 ) . அவர் பிறந்த நாளில் அவரைப் பற்றிய பதிவை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பிறந்தது சென்னையில். பூர்வீகம் நெல்லை. அவரின் தந்தை செல்வராஜ் இளையராஜா இசைக்குழுவில் வாய்ப்பாட்டு கலைஞராக இருந்துள்ளார். அதன் தொடர்ச்சியோ என்னவோ குரல் மூலமே ( கோரஸ் ) பின்னணி இசை அமைப்பதில் வல்லவர் . லாலா லா ... போதும். எளிய மெல்லிசை பாடல்கள் அவர் பலம். இயக்குனர் விக்கிரமனுடன் இவர் இணைந்த எல்லா படங்களும் வெற்றி பெற்றன.

1997 இல் சூரிய வம்சம் படத்திற்காக தமிழக அரசு விருதும் , 1999 இல் ராஜா என்ற தெலுங்கு படத்திற்காக பிலிம்பேர் விருதும் பெற்றார்.

ஹிட் படங்கள் : பூவே உனக்காக , சூரிய வம்சம் , அவள் வருவாளா , உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் , துள்ளாத மனமும் துள்ளும் , வானத்தைப் போல , ஆனந்தம்..
_______________________________

ஜூலை மாதம் பூக்கும்
கொன்றைப் பூக்கள் போல

சேலை கொண்ட பெண்ணின்
அங்கம் தோற்றம் காட்டுதே

தாஜ்மகாலின் வண்ணம்
மாறக்கூடும் பெண்ணே

மேனி கொண்ட கன்னம்
மின்னும் வண்ணம் கூடுதே

நிறமுள்ள மலர்கள்
சோலைக்கு பெருமை

நீ உள்ள ஊரில்
வசிப்பது பெருமை

இருபது கோடி நிலவுகள்
கூடி பெண்மையானதோ

என் எதிரே வந்து
புன்னகை செய்ய கண் கூசுதோ..
_________________________________

படம் : துள்ளாத மனமும் துள்ளும்
பாடல் : வைரமுத்து
பாடகர் : ஹரிஹரன்

பரத்வாஜ்

30 நாள் 30 இசை - நாள் 4


பரத்வாஜ்


1998 இல் ''காதல் மன்னன்'' படத்தில் அறிமுகமான பரத்வாஜ் அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலி. CA பட்டதாரி . சிறுவயதிலேயே ஆல் இந்தியா ரேடியோ ,DD நிகழ்ச்சிகளுக்கு இசை அமைத்துள்ளார். இயக்குனர் சரண் மூலம் தமிழ் திரையில் நுழைந்தார்.

50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள பரத்வாஜின் முதலாவது ,25 வது ,50 வது படங்கள் அஜித் படங்கள் !.

2 முறை பிலிம்பேர் விருதும் , 2008 இல் கலைமாமணி விருதும் பெற்றார். இவர் இசையில் ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்காக கவிஞர் பா.விஜய் தேசிய விருது பெற்றார். அதே பாடலை பாடியதற்காக சித்ராவும் தேசிய விருது பெற்றார்.

திருக்குறளுக்கு இசை அமைக்கும் பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் அனைத்து பாடகர்களையும் பாட வைக்கிறார்.

ஹிட் படங்கள் : காதல் மன்னன் , அமர்க்களம் , பாண்டவர் பூமி , ரோஜா கூட்டம் ,ஜெமினி , வசூல்ராஜா MBBS , ஆட்டோகிராப் ....
_________________________________

காதலி மூச்சு விடும்
காற்றையும் சேகரிப்பேன்

காதலி மிச்சம் வைக்கும்
தேனீர் தீர்த்தம் என்பேன்

கடற்கரை மணலில் நமது
பேர்கள் எழுதி பார்ப்பேன்

அலை வந்து அள்ளிச் செல்ல
கடலைக் கொல்ல பார்ப்பேன்

உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்
நான் வெயிலை வெட்ட பார்ப்பேன்

மொட்டுகளே மொட்டுகளே
மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிறாள்
காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கயிலே
மென்மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது .....
____________________________________

படம் : ரோஜா கூட்டம்
பாடல் : வைரமுத்து
பாடகர் : ஹரிஹரன் , சாதனா சர்க்கம்

தேனிசைத்தென்றல் தேவா

30 நாள் - 30 இசை - நாள் 3


தேனிசைத்தென்றல் தேவா


1989 ஆம் ஆண்டு மனசுக்கேத்த மகாராசா படத்தின் மூலம் அறிமுகமான தேவா ..MSV , இளையராஜாவிற்கு பிறகு அதிக படங்களுக்கு இசை அமைத்தவர். இவருக்கு தேனிசை தென்றல் என்ற பட்டத்தை வழங்கியது MS .விஸ்வநாதன் அவர்கள் . குறுகிய காலத்தில் அதிக படங்களுக்கு இசை அமைத்து சாதனை புரிந்தவர்.

3 முறை தமிழக அரசின் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது பெற்றுள்ளார்.1992 இல் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. தற்போது தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக ஜெயலலிதா நியமித்துள்ளார்.

ஹிட் படங்கள் : அண்ணாமலை ,சூரியன் , ஆசை , பாட்ஷா , அவ்வை சண்முகி , காதல் கோட்டை , அருணாசலம் , நேருக்கு நேர் , வாலி ,குஷி , பஞ்ச தந்திரம் ...

_______________________________________

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே

என் காதலா... என் காதலா.....
நீ வா! நீ வா! என் காதலா...!

#மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா...

______________________________

படம் : நேருக்கு நேர்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகர் : ஹரிணி

சிற்பி

30 நாள் 30 இசை - நாள் 2


சிற்பி


1993 ஆம் ஆண்டு கோகுலம் படத்தின் மூலம் அறிமுகமாகி , முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர். 50 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.எளிமையான இசை இவரின் அடையாளம். சிந்தி மொழி பாடலின் சாயல் இருந்தது என கூறினாலும் ''உள்ளத்தை அள்ளித் தா'' பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

''உன்னை நினைத்து'' படத்திற்காக 2002 ஆம் ஆண்டின் சிறந்த இசைக்கான தமிழக அரசு விருது பெற்றார். 1997 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

முக்கிய படங்கள் : கோகுலம் , நான் பேச நினைப்பதெல்லாம் , நாட்டாமை , உள்ளத்தை அள்ளித்தா

________________________________________

கேட்காமல் காட்டும்
அன்பு உயர்வானது

கேட்டுக் கொடுத்தாலே
காதல் அங்கு உயிரானது

கேட்கும் கேள்விக்காகதானே
பதில் வாழுது

காதல் கேட்டு வாங்கும்
பொருளும் அல்ல இயல்பானது

நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல

காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல்
முகம் தன்னை மறைக்கும்

ஒருதலையாகவும்
சுகம் அனுபவிக்கும்

சுவாரஸ்யமானது காதல்
மிக மிக சுவாரஸ்யமானது காதல்...

___________________________________



படம் : கோடம்பாக்கம்
பாடலாசிரியர்: விஜய் சாகர்
பாடியவர்கள் : ஹரிணி , ஹரிஷ் ராகவேந்திரா

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

வித்யாசாகர்

30 நாள் - 30 இசை - நாள் 1


வித்யாசாகர்


1989 ஆம் ஆண்டு பூமணம் என்ற தமிழ் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான வித்யாசாகர் தமிழ் , மலையாளம் , தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி மொழிகளில் 250 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். மனதை வருடும் பல மெல்லிசை பாடல்களை தந்தவர்.

2005 ஆம் ஆண்டு ஸ்வரபிஷேகம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த இசைக்கான தேசிய விருது பெற்றார். சிறந்த பண்பாளரான வித்யாசாகரோடு இசைப் பயணம் இனிதே தொடங்குகிறது.

முக்கிய படங்கள் : கர்ணா, தில் ,ரன் , கில்லி , அன்பே சிவம் , சந்திரமுகி , பார்த்திபன் கனவு, பூவெல்லாம் உன் வாசம் , மொழி ...

--------------------------------------------------------

பாதி ஜீவன் கொண்டு
தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் உன்னை
பார்த்த போது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே

ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா

மலரே மௌனமா
மலர்கள் பேசுமா

மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே...
----------------------------------------------

படம் : கர்ணா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்