30 நாள் 30 இசை - நாள் 10
#தன்ராஜ் மாஸ்டர்
ஒரு படத்திற்கு கூட இசை அமைக்காத தன்ராஜ் மாஸ்டரை தவிர்த்து விட்டு தமிழ் சினிமா இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறதா...
சென்னை மயிலாப்பூரை ( பூர்வீகம் தஞ்சாவூர் ) சேர்ந்த தன்ராஜ் மாஸ்டர் தமிழ் திரை இசையின் துரோணாச்சாரியார். வெஸ்டர்ன் கிளாசிகல் மியூசிக் எனப்படும் மேற்கத்திய இசை குரு.
இளையராஜா ,கங்கை அமரன் , AR ரஹ்மான் , தேவா , வித்யாசாகர் , மலையாள இசை அமைப்பாளர் ஷ்யாம் ... எல்லோரும் அவரின் பெருமைக்குரிய சீடர்கள்...
இவர்கள் அனைவரும் திரை இசைக்கான அடிப்படை பயிற்சி , வெஸ்டர்ன் கிளாசிகல் இரண்டையும் தன்ராஜ் மாஸ்டரிடம் பயின்றார்கள். தன் முதன்மை சீடர் ராசையாவை ராஜா என்றே அழைத்தார். பிறகு அன்னகிளியின் போது பஞ்சு அருணாசலம் அவர்கள் இளையராஜா என மாற்றினார்.ரஹ்மான் இவரிடம் அடிப்படை இசை பயின்ற பிறகு லண்டன் ட்ரினிடி இசை பள்ளியில் மேல் படிப்பை படித்தார்.
இசை குறித்து இவர் எழுதியுள்ள இரண்டு நூல்கள் இன்று இசை பயிலும் அனைவருக்கும் பால பாடம் ஆகும். இசை விதி 180 டிகிரி , பிரம்ம மேள பிரமாணம்’ என்ற அந்த இரு நூல்கள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
தன்ராஜ் மாஸ்டர் சார்பாக அவரின் சிஷ்யர் இளையராஜாவின் இசையில் இருந்து ஒரு பாடல் ..
_______________________________
பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசை கிளியே
வந்தாயே பண்ணோடு ...
நான் பிறந்த நாளில்
இது நல்ல நாளே ..
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா ...
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ ...இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ ... தூதானதோ... .
_____________________________________
படம் : கிழக்கே போகும் ரயில்
பாடல் : கண்ணதாசன்
பாடகர் : மலேசியா வாசுதேவன்,S .ஜானகி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக