30 நாள் 30 இசை - நாள் 9
T .ராஜேந்தர்
1980 ஆம் ஆண்டு ஒரு தலை ராகத்தில் இசை அமைப்பாளராக , இயக்குனராக , நடிகராக அறிமுகமான ராஜேந்தர் தமிழ் சினிமாவின் அஷ்டாவதானி . இயக்கம் ,நடிப்பு , பாடல் , இசை , நடனம் , உடைகள் , கலை , தயாரிப்பு .. எல்லாவற்றிலும் சாதித்தவர்..
இன்றைய 9 வது நாள் ஸ்பெசல் ராஜேந்தர். அவருக்கும் 9 ஸ்பெசல் தான். முதல் படம் ஒரு தலை ராகம் , கடைசியாக வந்த வீராசாமி தவிர எல்லா பட தலைப்புமே 9 எழுத்துக்களில் இருக்கும்.!
பாடலாசிரியர் ராஜேந்தர் இன்னும் ஸ்பெசல். கம்பனுக்கு இணையான கற்பனை இவர் பாடல்களில் இருக்கும் என்று BH.அப்துல் ஹமீது ஒரு முறை சொன்னார். இன்றைய பாடலை பாருங்கள் . காதலியின் கண்களை இதைவிட அழகாக யாராலும் வர்ணிக்க முடியாது. இன்றைக்கும் TR ஹிட்ஸ் CD விற்பனை ஆகிறது என்கிறார் CD கடை நண்பர்.
ஹிட்ஸ் : ஒரு தலை ராகம் , ரயில் பயணங்களில் , தங்கைக்கோர் கீதம் , மைதிலி என்னை காதலி , என் தங்கை கல்யாணி , ஒரு தாயின் சபதம் ....
______________________________
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா..
அம்மம்மா
உன் மைவிழிக் குளத்தினில்
தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனத்தினில்
கமழ்வது தமிழ்மணமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும்
உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட
ஏதேதோ குயில்கள்
மலையில் நெளியும் மேகக்குழல்கள்
தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோத பாதம் நோக
நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
______________________________
படம் : ரயில் பயணங்களில்
பாடல் : ராஜேந்தர்
பாடகர் : ஜெயச்சந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக