30 நாள் 30 இசை - நாள் 18
சுந்தர் சி பாபு
2006 ஆம் ஆண்டு ''சித்திரம் பேசுதடி'' மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான சுந்தர் சி பாபு அவர்கள் , பாரம்பரிய இசைக் குடும்பத்தை சார்ந்தவர். அவர் தந்தை புகழ் பெற்ற வீணை கலைஞர் சிட்டி பாபு . அவர் தாயார் சுதக்சினா தேவியும் வீணை கலைஞர் . சுந்தர் சி பாபுவின் தாய்வழி தாத்தா பட்டாபி சீதாராமையா ஆந்திரா வங்கியின் நிறுவனர்.
தமிழ் , தெலுங்கு , கன்னட மொழிகளில் சுமார் 30 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். வித்தியாசமான எளிய இசை இவர் அடையாளம். நாடோடிகள் படத்தில் பின்னணி இசையில் அசத்தி இருப்பார். '' வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் '' மூலம் வித்தியாசமான கானா பாடல் பாணியை அறிமுகப்படுத்தினார்.
ஹிட் படங்கள் :
சித்திரம் பேசுதடி , பஞ்சாமிர்தம் , அஞ்சாதே , நாடோடிகள் , தூங்கா நகரம் , போராளி ....
______________________________________
மனமென்னும் குளத்தில்
விழி என்னும் கல்லை
முதல் முதல் எறிந்தாளே
அலையலையாக
ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே
நதி வழி போனால்
கரை வரக்கூடும்
விதி வழிப் போனானே
விதை ஒன்று போட
வேரொன்று முளைத்த
கதை என்று ஆனானே
என் சொல்வது.... என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக
தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்
#உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதலாகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம் .......
______________________________
படம் : நாடோடிகள்
பாடல் : வாலி
பாடகர் : ஹரிஹரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக