30 நாள் 30 இசை - நாள் 20
ஜோஷ்வா ஸ்ரீதர்
2004 இல் ''காதல்'' படம் மூலம் அறிமுகமான ஜோஸ்வா ஸ்ரீதர் சென்னையை சேர்ந்தவர். தமிழ் , தெலுங்கு , கன்னட மொழிகளில் சுமார் 30 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
திறமையானவராக
இருந்தும் தனிப்பட்ட பிரச்சனைகளால் சில காலம் சினிமாவில் இவர் இல்லை.
திருமணமாகி மனைவி குழந்தையை விட்டுவிட்டு தோழியுடன் தலைமறைவானதாக பரபரப்பு
ஏற்பட்டது. இது தொடர்பான வழக்குகளால் வாய்ப்புகளை இழந்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது ''ஒரு குப்பை கதை'' என்ற படத்திற்கு இசை அமைத்து கொண்டிருக்கிறார். மீண்டும் வெற்றிகளை கொடுக்க வாழ்த்துக்கள் . இவரின் இசையில் வெளிவந்த பெரும்பான்மையான பாடல்களை நா. முத்துகுமார் மட்டுமே எழுதியுள்ளார்.
ஹிட் படங்கள் :
காதல் , உயிர் , சென்னை காதல் , கல்லூரி , வெப்பம் , வித்தகன் ....
________________________________________
அறியாதொரு வயதில் விதைத்தது
அதுவாகவே தானாய் வளர்ந்தது
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்
அட யாரது யாரதை பறித்தது
உன் கால் தடம் சென்ற வழி
பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா
நான் கேட்டது அழகிய நேரங்கள்
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்
நான் கேட்டது வானவில் மாயங்கள்
யார் தந்தது வழிகளில் காயங்கள்
இந்த காதலும் ஒரு வகை சித்ரவதைதான்
அது உயிருடன் எரிக்குதுடா
#மழை வரும் அறிகுறி,
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா ? சாதலா?
பழகிய காலங்கள்,
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ ....
____________________________________________
படம் : வெப்பம்
பாடல் : நா.முத்துக்குமார்
பாடகி : சுசானா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக