30 நாள் 30 இசை - நாள் 17
#மணி சர்மா
மணிசர்மாவின் சொந்த ஊர் மசூலிப்பட்டினம் . ஆனாலும் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். கீ-போர்ட் பிளேயராக SPB , மரகதமணி , ராஜ்கோட்டி ஆகியோரிடம் பணிபுரிந்துள்ளார். பிறகு சில படங்களுக்கு பின்னணி இசை மட்டும் அமைத்தார்.
1998 இல் சூப்பர் ஹீரோஸ் என்ற தெலுங்கு படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான மணிசர்மா , தமிழில் அந்தப்புரம் (1999) படம் மூலம் அறிமுகமானார். 40 தமிழ் படங்கள் உட்பட 175 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
மெலடி பாடல்களில் வல்லவர். ஆந்திராவில் இவருக்கு மெலடி பிரம்மா என பட்டம் குடுத்து கவுரவித்துள்ளனர். 3 முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.
HIT SONGS...
அச்சச்சோ புன்னகை , மெல்லினமே மெல்லினமே ( ஷாஜஹான் )
ஆல் தோட்ட பூபதி ( யூத் )
வெண்ணிலா வெண்ணிலா ( ஆஞ்சநேயா )
ஏ ஆத்தா ஆத்தோரமா ( மலைக்கோட்டை )
வசந்த முல்லை , டோலு டோலு தான் ( போக்கிரி )
________________________________
நவம்பர் மாத மழையில்
நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில்
நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றாய்
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ
மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்த சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்.
#சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே..
____________________________________
படம் : யூத்
பாடல் : வைரமுத்து
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக