ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

அனிருத் ரவிசந்தர்‬

30 நாள் 30 இசை - நாள் 28

அனிருத் ரவிசந்தர்‬

 
2011 ஆம் ஆண்டு ''3'' படம் மூலம் அறிமுகமான அனிருத் , ரஜினிகாந்தின் மனைவி லதாவின் சகோதரர் மகன். இந்த படத்திற்கு இசை அமைத்த போது அவருக்கு வயது 21. வித்தியாசமான இசை மூலம் முதல் படத்திலேயே சாதனை படைத்தார்.

''3'' படத்தில் இடம் பெற்ற தென்னிந்திய 'Folk ' பாணியில் அமைந்த ''ஒய் திஸ் கொலைவெறி'' பாடல் யூடியூப்பில் கோடியை தாண்டி ஹிட் அடித்து புதிய சாதனை படைத்து, youtube இன் கோல்ட் மெடல் விருது பெற்றது. வணக்கம் சென்னையில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

இரண்டாம் உலகம் படத்திற்கு பின்னணி இசை அமைத்தார். விரைவில் வெளியாக உள்ள விஜயின் ''கத்தி'' படத்துக்கு இசை அமைத்துள்ளார். இளைய தலைமுறையின் நம்பிக்கையான இசை அமைப்பாளர்களில் அனிருத்தும் ஒருவர்.

ஹிட் பாடல்கள் :

1. கண்ணழகா ( 3 )
2. பூமி என்னை சுத்துதே ( எதிர் நீச்சல் )
3. ஒசக்க ஒசக்க ( வணக்கம் சென்னை )
4. பூ இன்று நீயாக ( வேலையில்லாத பட்டதாரி )
5. மாஞ்சா ( மான் கராத்தே )
_____________________________________________
உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால்
மறவேனே பெண்ணே…

இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

‪#‎போ‬ நீ போ
போ நீ போ

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

நீ தொட்டால் இடமெல்லாம்
எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோட விளையாட
விதி செய்த அன்பே போ...
____________________________
படம் : 3
பாடல் : தனுஷ்
பாடகர் :அருனித், மோஹித்

ஜிப்ரான்‬

30 நாள் 30 இசை - நாள் 27

 ஜிப்ரான்‬



2011 ஆம் ஆண்டு ''வாகை சூடவா'' படத்தின் மூலம் அறிமுகமாகி இதுவரை 7 படங்கள் மட்டுமே ஜிப்ரான் இசையில் வந்திருந்தாலும் இவரின் இசை பயணம் பெரியது. சொந்த ஊர் கோவை . கிப்ரானின் தந்தையின் தொழிலில் ஏற்ப்பட்ட நஷ்டத்தின் காரணமாக சென்னைக்கு குடி பெயர்ந்தனர்.

இசை மீது ஆர்வம் ஏற்பட்டு முறைப்படி கீபோர்ட் கற்றுக்கொண்டார். 2000 ஆம் ஆண்டு சொந்தமாக ஸ்டூடியோ துவங்கிய ஜிப்ரான், அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 700 விளம்பரங்களுக்கு இசை அமைத்தார். அனைத்து மொழிகளிலும் சுமார் 800 சீரியல்களுக்கு டைட்டில் பாடலுக்கு இசை அமைத்தார்.

அடுத்த தலைமுறையின் நம்பிக்கையான இசை அமைப்பாளர்களில் ஒருவராக ஜிப்ரான் இருப்பார் என்கிறார் கலைஞானி கமல்ஹாசன். அதுமட்டுமல்ல கமலின் அடுத்த 3 படங்களுக்கும் ஜிப்ரான் தான் இசை!. ( விஸ்வரூபம் -2 , உத்தம வில்லன் , பாபநாசம் )

படங்கள் : வாகை சூட வா , வத்திகுச்சி , குட்டிபுலி , நையாண்டி , அமர காவியம் ....
______________________________
எங்க ஊரு பிடிக்குதா
எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல
சுட்ட ஈரல் மணக்குதா

முட்டை கோழி பிடிக்கவா
முறை படி சமைக்கவா
எலும்புங்க கடிக்கயில்
என்ன கொஞ்ச நினைக்க வா

கம்மஞ்சோறு ருசிக்க வா
சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடகத்தா ரசம் வச்சு
மடக்க தான் பாக்குறேன்

ரெட்டை தோசை
சுட்டு வச்சு காவ காக்குறேன்
முக்கண்ணு நொங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்குற...

# சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல
நெஞ்சம் சத்தம் போடுதே...
________________________________
படம் : வாகை சூட வா
பாடல் : வைரமுத்து
பாடகர் : சின்மயி

ஹாரிஸ்‬ ஜெயராஜ்

30 நாள் 30 இசை -நாள் 26


ஹாரிஸ்‬ ஜெயராஜ்


2000 ஆம் ஆண்டு கௌதம் மேனனின் மின்னலே படத்தில் அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் சொந்த ஊர் சென்னை. ஹாரிஸின் தந்தை ஜெயகுமார் கிடார் கலைஞர், மலையாள இசைஅமைப்பாளர் ஷ்யாமின் உதவியாளர். ஹாரிசையும் ஒரு கிடார் கலைஞராக ஆக்க வேண்டும் என 6 வயது முதலே இசை பயிற்சி அளித்தார். லண்டன் டிரினிடி இசை கல்லூரியின் 4ஆம் கிரேடில் ஹாரிஸின் மதிப்பெண் இன்றளவும் ஆசிய சாதனை.!

Synthesizers எனப்படும் கம்ப்யூட்டர் எலெக்ட்ரானிக் கீபோர்டில் திறமையாளர் ஆனார். 2000 ஆம் ஆண்டுவரை அனைத்து இசை அமைப்பாளர்களிடமும் ப்ரோகிராமராக சுமார் 600 படங்களுக்கு பணி ஆற்றினார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த ஹாரிஸ்.. 5 முறை பிலிம்பேர் விருது , தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட எண்ணற்ற விருதுகள் பெற்றுள்ளார். கவிஞர் தாமரையின் ஹிட் பாடல்கள் அனைத்தும் ஹாரிஸின் இசையே...

ஹிட் பாடலகளில் சில...

1. முதல் கனவே முதல் கனவே (மஜ்னு )
2. ஆகாய சூரியனை ( சாமுராய் )
3. இதுதானா இதுதானா ( சாமி )
4. ஒன்றா ரெண்டா ஆசைகள் ( காக்க காக்க )
5. அண்டங்காக்கா கொண்டைக்காரி ( அந்நியன் )
6. சுட்டும் விழிச் சுடரே ( கஜினி )
7. பார்த்த முதல் நாளே ( வேட்டையாடு விளையாடு )
8. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ( வாரணம் ஆயிரம் )
9. விழி மூடி யோசித்தேன் ( அயன் )
10. அஸ்க்கு லஸ்கா ஹேமோ ( நண்பன் )
____________________________________
அடை மழை வரும்
அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்

குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்

எங்கேயும் போகாமல்
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

‪#‎வசீகரா‬ என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
தூங்கினால் போதும்

அதே கணம் என் கண்ணுறங்கா
ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே ....
_________________________________
படம் : மின்னலே
பாடல் : தாமரை
பாடகர் : பாம்பே ஜெயஸ்ரீ

திங்கள், 22 செப்டம்பர், 2014

D இமான்

30 நாள் 30 இசை - நாள் 25

 D இமான்

 
2001 ஆம் ஆண்டு விஜய் நடித்த ''தமிழன்'' படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆன D.இமான் , தமிழ் திரையின் இன்றைய மெல்லிசை மன்னர். சொந்த ஊர் சென்னை. பச்சையப்பா கல்லூரி மாணவர். மனைவி மோனிகா , 2 பெண் குழந்தைகள் .

சுமார் 50 தமிழ் படங்களுக்கும் , 10 தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். சினிமாவுக்கு வரும் முன்பே சின்ன திரையில் இசை அமைத்து வந்தார். கோலங்கள் , கிருஷ்ண தாசி , திருமதி செல்வம் போன்ற சீரியல்கள் ... இவ்வளவு இருந்தாலும் இமானை எல்லோருக்கும் தெரிய படுத்தியது கும்கி.. கும்கி படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றார்.

நடிகர் அர்ஜுனின் 2004 க்கு பின் வந்த எல்லா படங்களுக்கும் ( கிரி , ஆணை ,சின்னா ,,வாத்தியார் , மதராசி , மருதமலை ,துரை,வந்தே மாதரம் ) இமான் தான் இசை . அதே போலவே சுந்தர்.C யின் படங்களுக்கும் ... தற்போது பிறப்பு சாலமனின் கயல் படத்தின் பாடல்கள் எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிட் படங்கள் :

விசில் , திருவிளையாடல் ஆரம்பம் , மைனா , கும்கி , வருத்தபடாத வாலிபர் சங்கம் , பாண்டிய நாடு ..
_____________________________________
அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல

உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்

மனசயே தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல

வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

‪#‎சொல்லிட்டாளே‬ அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல

இது போல் ஒரு வார்த்தைய
யாரிடமும் நெஞ்சு கேக்கல

இனி வேறொரு வார்த்தையே
கேட்டிடவும் எண்ணி பார்க்கல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்....
______________________________________
படம் : கும்கி
பாடல் : யுகபாரதி
பாடகர் :ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்

சனி, 20 செப்டம்பர், 2014

தமன்‬

30 நாள் 30 இசை - நாள் 24

‪‎தமன்‬



இசை அமைப்பாளராக நுழையும் முன்பே சங்கரின் பாய்ஸ் படத்தில் நாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆனார் தமன். புகழ்பெற்ற தெலுங்கு இயக்குனர் கண்டசாலாவின் பேரன். தமனின் தந்தை கண்டசாலா சிவகுமார் புகழ்பெற்ற டிரம் வாசிப்பாளர் . அம்மா சாவித்திரி பின்னணி பாடகி. மனைவி ஸ்ரீ வர்தினியும் பின்னணி பாடகியே..

ராஜ்கோட்டி, மரகதமணியிடம் உதவியாளராக இருந்தார். 2008 இல் சிந்தனை செய் என்ற படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆன தமன் , 5 மொழிகளில் சுமார் 75 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். ஒருமுறை பிலிம் பேர் விருது பெற்றுள்ளார்.

ஹிட் படங்கள் :

தில்லாலங்கடி , ஈரம் , வந்தான் வென்றான் , காஞ்சனா , மம்பட்டியான் , ஒஸ்தி , மௌன குரு , காதலில் சொதப்புவது எப்படி , கண்ணா லட்டு தின்ன ஆசையா , சேட்டை , பட்டத்து யானை....
________________________________________
ராகு காலத்தில
நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா

பிள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா

இஞ்சு இஞ்சா
இடைவெளி கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா

இங்கிலாந்து ராணி போல
தங்கத்துல எழச்சு
வாழ வப்பேன் மாசா (mass ஆ )

அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்

பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிரம் சொல்லடி

‪#‎என்ன‬ ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா

வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ......
___________________________
படம் : பட்டத்து யானை
பாடல் :நா .முத்துக்குமார்
பாடகர் :கார்த்திக்

தினா‬

30 நாள் 30 இசை - நாள் 23

 தினா‬


2000 ஆம் ஆண்டு ''மிடில் கிளாஸ் மாதவன்'' மூலம் அறிமுகம் ஆனார் தினா (இயற்ப்பெயர் தினகரன் ) . ஆனால் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தமிழக தாய்மார்களிடம் தினாவின் பாடல்கள் பிரபலம்.

சொந்த ஊர் கோவை.தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்றார். இசை அமைப்பாளர் GK வெங்கடேசிடம் உதவியாளராக இருந்தார். பிறகு தொலைக்காட்சி சீரியல்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். சன் டிவியில் சித்தி ,ராஜ் டிவியில் கங்கா யமுனா சரஸ்வதி ... என ஆரம்பித்து சுமார் 100 சீரியல் களுக்கு இசை அமைத்துள்ளார்.

இவ்வளவு சாதித்தும் தினாவை எல்லோருக்கும் அடையாளம் காட்டியது திருடா திருடி படத்தில் அவர் இசை அமைத்த ''மன்மத ராசா'' பாடலே. 50 படங்களுக்கும் , சுமார் 30 ஆல்பங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

ஹிட் பாடல்கள் :

1.கண்ணின் மணி கண்ணின் மணி ( சித்தி , சீரியல் )
2.புண்ணிய நீரோடு ( கங்கா யமுனா சரஸ்வதி ,சீரியல் )
3. அம்மி அம்மி அம்மி மிதித்து ( மெட்டி ஒலி , சீரியல் )
4. சகியே போகாதே போகாதே ( கிங் )
5.கும்பிட போன தெய்வம் ( திருப்பாச்சி )
6.ஹார்மோன் சுரக்குது (ஆயுதம் )
7.திண்டுக்கல்லு திண்டுக்கலு ( திண்டுக்கல் சாரதி )
_______________________________________________
என்னில் உன்னை
நான் சேர்த்து வைக்கலாமா
வாழும் வரைக்கும்
நான் செலவாக வரவா

பனி காலமா இல்ல வேர்வையா
அடி காற்றை நானும் தொடவா
தோள் சாயனும், கை ஆயனும்
அட நாணம் கை தான் விடுமா

வெத்து காத்து தான் வீண்மூச்சு
காதல் மட்டும் தான் வாழ்வாச்சு
மத்த நேரம் ரொம்ப போர்-ஆச்சு
பொன்னுகுள்ள தான் என்னாச்சு

மொத்த நேரமும் ஆராய்ச்சி
பொன்னுகுள்ள ஆணின் மனசாட்சி
விரலால், நானும்,
உன் தேகம் நெய்யலமா
அடடா கூச்சம்
உன்னை சும்மா விடுமா

உன் மூச்சிலும், என் பேச்சிலும்,
நம் வாழும் வாழ்க்கை கொடுமா
விழி வீச்சிலும், பொய் பேச்சிலும்
நம் காதல் வாழும் சுகமா …

‪#‎கண்ணும்‬ கண்ணும்தான் கலந்தாச்சு
கலப்பு காதல் தான் கருவாச்சு
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு...
______________________________________
படம் : திருப்பாச்சி
பாடல் : பேரரசு
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன்

தேவி‬ ஸ்ரீ பிரசாத்

30 நாள் 30 இசை - நாள் 22


‪‎தேவி‬ ஸ்ரீ பிரசாத் 

 

DSP என்ற தேவி ஸ்ரீ பிரசாத் ''தேவி'' என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். இதே படம் மூலம் தமிழிலும் அறிமுகம். பிறந்தது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்.படித்தது சென்னையில். இசை அமைப்பாளர் , பாடகர் ,பாடலாசிரியர்... என பல துறைகளிலும் சாதித்தாலும் மேடை பாடகராக அசத்துவார்.

ரஹ்மான் , யுவன் இசையிலும் பாடியுள்ளார். சுமார் 100 படங்களுக்கு இசை அமைத்துள்ளார் . 5 முறை பிலிம்பேர் விருது உட்பட நிறைய விருதுகள் பெற்றுள்ளார். தசாவதாரம் படத்திற்கு பின்னணி மட்டும் அமைத்தார்.

ஹிட் பாடல்கள் :

1. நீ வரும் போது நான் நனைவேனா - மழை
2. கண்ணு ரெண்டும் ரங்கா ராட்டினம் - குட்டி
3. பூப்பறிக்க நீயும் - ச.ச. உனக்கும் எனக்கும்
4.கட்டு கட்டு கீரை கட்டு - திருப்பாச்சி
5. காத்தாடி போல ஏண்டி - மாயாவி
6. கண் மூடி திறக்கும் போது - சச்சின்
7.அடடா அடடா அடடா - சந்தோஷ் சுப்ரமணியம்
8. டாடி மம்மி வீட்டில் - வில்லு
9.மியாவ் மியாவ் பூனை - கந்தசாமி
10. காதல் வந்தாலே - சிங்கம்
________________________________
ஏதேதோ தேசங்களை
சேர்க்கின்ற நேசம்தனை

நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசம்தனை

காதல் என்று பேர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது

என்னை போலே பெண் குழந்தை
உன்னை போல் ஒரு ஆண் குழந்தை

நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர் தானடி

‪#‎நீல‬ வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய்
கைகளே ஆசையாய்

வைய்யமே கோயிலாய்
வானமே வாயிலாய்

பால்வெளி பாயிலே
சாய்ந்து நாம் கூடுவோம்

இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே...
__________________________
படம் : மன்மதன் அம்பு
பாடல் : கமல்ஹாசன்
பாடகர் : கமல்ஹாசன் , ப்ரியா ஹிமேஷ்

சனி, 13 செப்டம்பர், 2014

ஸ்ரீகாந்த் தேவா‬

30 நாள் 30 இசை - நாள் 21

‪‎ஸ்ரீகாந்த் தேவா‬

 

 2000 ஆம் ஆண்டு டபுள்ஸ் என்ற படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் தேவா , தேனிசைதென்றல் தேவா அவர்களின் புதல்வர். அவர் காதல் மனைவி பாடகி பெபி மணி (ரஹ்மான் இசையில் மின்சார கனவில் ஸ்ட்ராபெரி கண்ணே .. பாடலை பாடியவர்) . இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் .

ஆரம்பத்தில் அப்பா இசை அமைக்கும் படங்களில் பின்னணி இசை அமைத்தார். பிறகு தனியாக இசை அமைக்க துவங்கி 50 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 2004 ஆம் ஆண்டு M.குமரன்S/O மகாலட்சுமி படத்திற்காக தமிழக அரசு விருது பெற்றார்.

நிறைய மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜெயம் ரவியின் ''பூலோகம்'' படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

ஹிட் படங்கள் :

ஏய் , குத்து , M.குமரன் S/O மகாலட்சுமி , ஜோர் , சாணக்யா , சிவகாசி , ஈ , 6 மெழுகுவர்த்திகள் , ....
___________________________________
சகி உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்

உன்னை காணவே நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்

காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்

பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்

‪#‎சென்னை‬ செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்

கேரள நாட்டு கிளியே நீ
சொல்லு வசியம் வைத்தாயோ...
____________________________________
படம் : M.குமரன் S/O மகாலட்சுமி
பாடல் : நா.முத்துகுமார்
பாடகர் : ஹரீஸ்ராகவேந்திரா

ஜோஷ்வா‬ ஸ்ரீதர்

30 நாள் 30 இசை - நாள் 20

 ஜோஷ்வா‬ ஸ்ரீதர் 


2004 இல் ''காதல்'' படம் மூலம் அறிமுகமான ஜோஸ்வா ஸ்ரீதர் சென்னையை சேர்ந்தவர். தமிழ் , தெலுங்கு , கன்னட மொழிகளில் சுமார் 30 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

திறமையானவராக இருந்தும் தனிப்பட்ட பிரச்சனைகளால் சில காலம் சினிமாவில் இவர் இல்லை. திருமணமாகி மனைவி குழந்தையை விட்டுவிட்டு தோழியுடன் தலைமறைவானதாக பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்குகளால் வாய்ப்புகளை இழந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது ''ஒரு குப்பை கதை'' என்ற படத்திற்கு இசை அமைத்து கொண்டிருக்கிறார். மீண்டும் வெற்றிகளை கொடுக்க வாழ்த்துக்கள் . இவரின் இசையில் வெளிவந்த பெரும்பான்மையான பாடல்களை நா. முத்துகுமார் மட்டுமே எழுதியுள்ளார்.

ஹிட் படங்கள் :

காதல் , உயிர் , சென்னை காதல் , கல்லூரி , வெப்பம் , வித்தகன் ....
________________________________________
அறியாதொரு வயதில் விதைத்தது
அதுவாகவே தானாய் வளர்ந்தது

புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்
அட யாரது யாரதை பறித்தது

உன் கால் தடம் சென்ற வழி
பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள்
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்

நான் கேட்டது வானவில் மாயங்கள்
யார் தந்தது வழிகளில் காயங்கள்

இந்த காதலும் ஒரு வகை சித்ரவதைதான்
அது உயிருடன் எரிக்குதுடா

‪#‎மழை‬ வரும் அறிகுறி,
என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே
இது என்ன காதலா ? சாதலா?

பழகிய காலங்கள்,
என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ ....
____________________________________________
படம் : வெப்பம்
பாடல் : நா.முத்துக்குமார்
பாடகி : சுசானா

வியாழன், 11 செப்டம்பர், 2014

விஜய் ஆன்டனி‬

30 நாள் 30 இசை - நாள் 19


‪‎விஜய் ஆன்டனி‬



2005 ஆம் ஆண்டு ''சுக்ரன்'' படம் மூலம் அறிமுகமான விஜய் ஆன்டனி , சாதாரண குடும்பத்தில் பிறந்து , போராடி வென்ற தமிழன். சொந்த ஊர் ஈரோடு அருகே உள்ள கிராமம் . மனைவி பெயர் பாத்திமா . 2 பெண் குழந்தைகள்.
சுமார் 50 படங்களுக்கு இசை அமைத்துள்ள விஜய் ஆண்டனி, சிறந்த பாடகரும் கூட.. நல்ல நடிகராகவும் ''நான்'' ''சலீம்'' படங்கள் மூலம் நிரூபித்துள்ளார்.
தற்போது ''இந்தியா பாகிஸ்தான்'' என்ற படத்தில் நடித்துவருகிறார். 2009 ஆம் ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ''கோல்டன் லயன்'' விருது பெற்றார் ( நாக்க மூக்க பாடலுக்காக) . இந்த விருது வென்ற முதல் இந்தியர் இவரே.

ஹிட் பாடல்கள் :

1.சப்போஸ் உன்னை காதலிச்சு ( சுக்ரன் )
2.நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ( டிஷ்யூம் )
3.ஏன் எனக்கு மயக்கம் ( நான் அவன் இல்லை )
4.உனக்கென நான் ( காதலில் விழுந்தேன் )
5.கரிகாலன் காலைப் போல ( வேட்டைக்காரன் )
6. ஒரு சின்ன தாமரை ( வேட்டைக்காரன் )
7. அழகாய் பூக்குதே சுகமாய் ( நினைத்தாலே இனிக்கும் )
8 . இடிச்ச பச்சரிசி ( உத்தம புத்திரன் )
9. மொலச்சு மூணு இலையும் , சில்லாக்ஸ் ( வேலாயுதம் )
10.மக்கயாலா ( நான் )
_____________________________________________
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை

அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை

அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை

அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை

‪#‎அவள்‬ அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
___________________________________
படம் : அங்காடித் தெரு
பாடல் : நா. முத்துகுமார்
பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன் , ரஞ்சித்

[இந்த படத்தின் மீதி பாடல்கள் GV பிரகாஷ் குமார் இசை. ]

புதன், 10 செப்டம்பர், 2014

சுந்தர்‬ சி பாபு

30 நாள் 30 இசை - நாள் 18

 சுந்தர்‬ சி பாபு 


2006 ஆம் ஆண்டு ''சித்திரம் பேசுதடி'' மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான சுந்தர் சி பாபு அவர்கள் , பாரம்பரிய இசைக் குடும்பத்தை சார்ந்தவர். அவர் தந்தை புகழ் பெற்ற வீணை கலைஞர் சிட்டி பாபு . அவர் தாயார் சுதக்சினா தேவியும் வீணை கலைஞர் . சுந்தர் சி பாபுவின் தாய்வழி தாத்தா பட்டாபி சீதாராமையா ஆந்திரா வங்கியின் நிறுவனர்.

தமிழ் , தெலுங்கு , கன்னட மொழிகளில் சுமார் 30 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். வித்தியாசமான எளிய இசை இவர் அடையாளம். நாடோடிகள் படத்தில் பின்னணி இசையில் அசத்தி இருப்பார். '' வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் '' மூலம் வித்தியாசமான கானா பாடல் பாணியை அறிமுகப்படுத்தினார்.

ஹிட் படங்கள் :

சித்திரம் பேசுதடி , பஞ்சாமிர்தம் , அஞ்சாதே , நாடோடிகள் , தூங்கா நகரம் , போராளி ....
______________________________________
மனமென்னும் குளத்தில்
விழி என்னும் கல்லை
முதல் முதல் எறிந்தாளே

அலையலையாக
ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே

நதி வழி போனால்
கரை வரக்கூடும்
விதி வழிப் போனானே

விதை ஒன்று போட
வேரொன்று முளைத்த
கதை என்று ஆனானே

என் சொல்வது.... என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக
தானே தேய்ந்தான்

கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்

‪#‎உலகில்‬ எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதலாகாது

எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம் .......
______________________________
படம் : நாடோடிகள்
பாடல் : வாலி
பாடகர் : ஹரிஹரன்

திங்கள், 8 செப்டம்பர், 2014

மணி சர்மா

30 நாள் 30 இசை - நாள் 17

#மணி சர்மா


 மணிசர்மாவின் சொந்த ஊர் மசூலிப்பட்டினம் . ஆனாலும் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். கீ-போர்ட் பிளேயராக SPB , மரகதமணி , ராஜ்கோட்டி ஆகியோரிடம் பணிபுரிந்துள்ளார். பிறகு சில படங்களுக்கு பின்னணி இசை மட்டும் அமைத்தார். 

1998 இல் சூப்பர் ஹீரோஸ்   என்ற தெலுங்கு படம் மூலம் இசை அமைப்பாளராக  அறிமுகமான மணிசர்மா  , தமிழில்  அந்தப்புரம் (1999) படம் மூலம் அறிமுகமானார். 40 தமிழ் படங்கள் உட்பட 175 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

மெலடி பாடல்களில் வல்லவர். ஆந்திராவில் இவருக்கு மெலடி பிரம்மா என பட்டம் குடுத்து கவுரவித்துள்ளனர். 3 முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.

HIT SONGS...

அச்சச்சோ புன்னகை , மெல்லினமே மெல்லினமே ( ஷாஜஹான் )
ஆல் தோட்ட பூபதி ( யூத் )
வெண்ணிலா வெண்ணிலா ( ஆஞ்சநேயா )
ஏ ஆத்தா ஆத்தோரமா ( மலைக்கோட்டை )
வசந்த முல்லை , டோலு டோலு தான் ( போக்கிரி )
________________________________

நவம்பர் மாத மழையில்
நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல்
மிக பிடிக்கும் என்றாய்

மொட்டை மாடி நிலவில்
நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல்
மிக பிடிக்கும் என்றாய்

சுகமான குரல் யார் என்றாய்
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ
மயக்கம் என நீ சொன்னாய்




கண்கள் மூடிய புத்த சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பது சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்

அடி உனக்கும் எனக்கும் எல்லா பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்.

#சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே..
 ____________________________________

படம் : யூத்
பாடல் : வைரமுத்து
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

SP.பாலசுப்ரமணியம்‬

30 நாள் 30 இசை - நாள் 16

 SP.பாலசுப்ரமணியம்‬



1977 இல் கன்யாகுமரி என்ற தெலுங்கு படத்தில் இசை அமைப்பாளராக அவதாரம் எடுத்த பாலுவின் முதல் தமிழ் படம் 1981 இல் வெளிவந்த ''தையல்காரன்'' . அற்புதமான இசை ஞானம் உள்ள பாலுவின் இசையை தமிழ் சினிமா ஏனோ கண்டுகொள்ளவில்லை . தமிழில் சில படங்கள் மட்டும் இசை அமைத்திருந்தாலும் தெலுங்கு , கன்னடம் என சுமார் 100 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

- 15 மொழிகளில் சுமார் 40000 பாடல்கள் பாடி , உலகிலேயே அதிக பாடல் பாடிய கின்னஸ் சாதனை
- 100 படங்களுக்கு இசை
- 75 படங்களில் நடிகராக..
- 2001 இல் பத்ம ஸ்ரீ
- 2011 இல் பத்ம பூஷண்
- 6 முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருது
- 4 டாக்டர் ( கௌரவ ) பட்டங்கள்
- 23 முறை ஆந்திர அரசின் நந்தி விருது
- 100 க்கும் மேற்பட்ட தமிழ் , இந்திய , சர்வதேச விருதுகள் ...

இவை எல்லாவற்றையும் விட பெருமை .. ஆந்திராவில் பிறந்தவராக இருந்தாலும் தமிழை யாராவது தவறாக உச்சரித்தால் , ஒரு தமிழாசிரியரை போல சரி செய்வது ... நாமெல்லாம் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

படங்கள் : தையல்காரன் , துடிக்கும் கரங்கள் , மயூரி , சிகரம் , உன்னை சரணடைந்தேன்.
____________________________________
என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ

என் காதலா உன் காதலா
நான் காணும் கோலமோ

என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ

பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ

பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ

‪#‎இதோ‬ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ

இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ...
________________________________
படம்: சிகரம்
பாடல் : வைரமுத்து
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

சந்திரபோஸ்‬

30 நாள் 30 இசை - நாள் 15

சந்திரபோஸ்‬



1979 இல் ''தரையில் வாழும் மீன்கள்'' என்ற படம் மூலம் அறிமுகமான திரு.சந்திரபோஸ் அவர்கள் 90 களின் முற்பகுதி வரை சுமார் 300 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஏவிஎம் தயாரிக்கும் படங்களுக்கு தொடர்ச்சியாக சந்திரபோஸ் மட்டுமே இசை அமைத்தார். நிறைய ரஜினி படங்களுக்கு இசை அமைத்தார்.

சூப்பர் ஸ்டார் என்ற பட்டதை பிரபலப்படுத்தியது சந்திரபோசின் ''சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா '' என்ற பாடலே.! குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ராஜா சின்ன ரோஜாவோடு... , டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை ... போன்ற பாடல்களை தந்தார்.

சில காலம் இசை துறையிலிருந்து விலகி இருந்தவர் , பிறகு சின்னத்திரை மெகா தொடர்களில் நடித்தார். உடல் நலக்குறைவு காரணமாக 2010 ஆம் ஆண்டு மறைந்தார்.

பச்ச புள்ள அழுதுச்சுன்னா .. , காளை காளை முரட்டுக் காளை... , வானத்தை பார்த்தேன் .. , பூஞ்சிட்டு குருவிகளா.. , தோடி ராகம் பாடவா ...

ஹிட் படங்கள் :சங்கர் குரு , விடுதலை , புதிய பாதை , பாட்டி சொல்லை தட்டாதே , ராஜா சின்ன ரோஜா , மனிதன் , மாநகர காவல் , வரவு எட்டணா செலவு பத்தணா ...
________________________________
உள்ளத்தை உன் கையில்
அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம்
என்றும் நீதானே

ஆத்தோரம் கொஞ்சிடும்
தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம்
அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ..

‪#‎மெதுவா‬ மெதுவா
ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும்
புது தாளம் போட்டு

புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள்
இந்த மின்னல் கீற்று....
___________________________________
படம்: அண்ணா நகர் முதல் தெரு
பாடல் : வாலி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

கார்த்திக்‬ ராஜா

30 நாள் 30 இசை - நாள் 14

‪‎கார்த்திக்‬ ராஜா 


ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் படத்தின் வெற்றிவிழா . அதில் பேசிய இளையராஜா '' இந்த படத்தின் ஹிட் பாடல் 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் ....' க்கு இசை அமைத்தது என் மூத்த மகன் கார்த்திக் ராஜா '' என்றார். அதன் பிறகே எல்லோருக்கும் தெரியும் . அதன்பிறகு உழைப்பாளி , பொன்னுமணி , அமைதிப் படை ... என சில படங்களுக்கு அப்பாவுடன் இணைந்து பின்னணி இசை மட்டும் அமைத்தார்.

1996 இல் அலெக்சாண்டர் படம் மூலம் முழு இசை அறிமுகமான கார்த்திக்ராஜா குறுகிய காலத்தில் நல்ல ஹிட் பாடல்களை குடுத்தார். திறமைசாலியான அவருக்கு அதன் பிறகு வாய்ப்புகள் குறைந்து போனது வருத்தமே.

50 படங்களுக்கு இசை அமைத்துள்ள கார்த்திக்ராஜா , 5 ஆல்பங்களை ( 4ஹிந்தி , 1 தமிழ் ) வெளியிட்டுள்ளார். ஒருமுறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார்.
ஹிட் படங்கள் : மாணிக்கம் , உல்லாசம் , நாம் இருவர் நமக்கு இருவர் , காதலா காதலா , உள்ளம் கொள்ளை போகுதே , டும் டும் டும் , ரகசியமாய் , குடைக்குள் மழை....
_____________________________________
நிலம், நீர், காற்றிலே
மின்சாரங்கள் பிறந்திடும்

காதல் தரும் மின்சாரமோ
பிரபஞ்சத்தைக் கடந்திடும்

நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்
பனியாய் பனியாய் உறைகிறேன்

ஓளியாய் நீ என்னைத் தீண்டினால்
நுரையாய் உன்னுள் கரைகிறேன்

காதல் வந்தாலே வந்தாலே
ஏனோ உலறல்கள் தானோ

‪#‎ரகசியமாய்‬ ரகசியமாய்
புன்னகைத்தால் பொருளென்னவோ..

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்

இலை வடிவில் இதயம் இருக்கும்
மலை வடிவில் அதுவும் கனக்கும்

சிரித்து சிரித்து சிறையிலே
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்...
___________________________________
படம் : டும் டும் டும்
பாடல் : நா. முத்துகுமார்
பாடகர் : ஹரிஹரன் , சாதனா சர்கம்

ஹம்சலேகா‬

30 நாள் 30 இசை - நாள் 13

 ஹம்சலேகா‬

 

  1987 இல் ''பிரேமலோகா'' என்ற கன்னட படத்தில் அறிமுகமான ஹம்சலேகா அவர்கள் இசைத்துறையில் சகலகலா வல்லவன் . சொந்த ஊர் மைசூர் . தமிழில் சில படங்களுக்கே இசை அமைத்திருந்தாலும் ,கன்னடத்தில் 300 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். எல்லா இசை கருவிகளையும் வாசிப்பார். கன்னட சினிமாவில் பாடலாசிரியர் , பாடகர் , கதாசிரியர் , வசனகர்த்தா .. என எல்லா ஏரியாவிலும் சாதித்தவர்.

''கனயோகி பஞ்சக்சரி கவயி'' என்ற கன்னட படத்திற்காக 1995 இல் தேசிய விருது பெற்றார். 6 முறை பிலிம்பேர் விருதும் , எண்ணற்ற விருதுகளை கர்நாடக அரசிடமும் பெற்றுள்ளார். ''Hamsalekha Desi Vidya Samsthe '' என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி ஏழை மாணவர்களுக்கு கல்வி மற்றும் இசை பயிற்சி அளிக்கிறார்.

எந்த பெண்ணிடம் இல்லாத ஒன்று... , காதல் இல்லை என்று சொன்னால் ..., பூவே உன்னை நேசித்தேன்.. , ஓ காதல் என்னை காதலிக்கவில்லை...
ஹிட் படங்கள் : கொடி பறக்குது , நாட்டுக்கொரு நல்லவன் , வேலை கிடைச்சுருச்சு , பருவ ராகம் , கேப்டன் மகள் ....
_____________________________________
வானத்து இந்திரரே
வாருங்கள் வாருங்கள்

பெண்ணுக்குள் என்ன இன்பம்
கூறுங்கள் கூறுங்கள்

இதுபோல் இதமோ சுகமோ
உலகத்தில் இல்லை

இவளின் குணமோ மணமோ
மலருக்குள் இல்லை

‪#‎சேலை‬ கட்டும் பெண்ணுக்கொரு
வாசம் உண்டு

கண்டதுண்டா
கண்டவர்கள் சொன்னதுண்டா

சேலை கட்டும் பெண்ணுக்கொரு
வாசம் உண்டு
கண்டு கொண்டேன்..
கண்களுக்குள் பள்ளி கொண்டேன்...
________________________________
படம் : கொடி பறக்குது
பாடல் : வைரமுத்து
பாடகர் : SPB , சித்ரா

திங்கள், 1 செப்டம்பர், 2014

மரகதமணி

30 நாள் 30 இசை - நாள் 12

மரகதமணி 



1990 இல் ''மனசு மமதா'' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான மரகதமணி அதே ஆண்டு ''அழகன்'' மூலம் தமிழில் கால் பதித்தார்.
ஆந்திராவை சேர்ந்த இவரின் இயற்பெயர் MM கீரவாணி. மரகதமணி என்ற பெயரில் தமிழிலும் , MM.க்ரீம் (Kreem) என்ற பெயரில் ஹிந்தியிலும் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தெலுங்கில் வெற்றி இசைமைப்பாளராக உள்ள மரகதமணி , தமிழில் சுமார் 25 படங்களே இசை அமைத்திருந்தாலும் , பெரும்பாலான தெலுங்கு டப்பிங் படங்களுக்கு இவர்தான் இசை.!

1997 இல் ''அன்னமையா'' என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருது பெற்றார். 8 முறை ஆந்திர அரசின் நந்தி விருதும் , 5 முறை பிலிம் பேர் விருதும் , ஒருமுறை தமிழக அரசு விருதும் ( அழகன் ) பெற்று சாதனை படைத்தவர்.

வெற்றி படங்கள் : அழகன் ,நீ பாதி நான் பாதி , வானமே எல்லை , ஜாதி மல்லி , பிரதாப் , கொண்டாட்டம் , நான் ஈ
______________________________________

எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா

சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதங்கள் இன்றுதான் வந்தது

சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி

தேன் மழை பொழிய
பூவுடல் நனைய

காமனின் சபையில்
காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்

‪‎சங்கீத‬ ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்....
____________________________________
படம் : அழகன்
பாடல் : புலமைபித்தன்
பாடகர் : SP பாலசுப்ரமணியம், சந்தியா

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மனோஜ்‬ கியான்

30 நாள் 30 இசை - நாள் 11

‪‎மனோஜ்‬ கியான் 

 

1981 இல் ரூஹி ( Roohi ) என்ற ஹிந்தி படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான மனோஜ் கியான் அவர்களுக்கு தமிழில் முதல் படம் ஊமை விழிகள் ( 1986 ) . முதல் படத்திலேயே வித்தியாசமான இசையால் திரும்பி பார்க்க வைத்தார். தோல்வி நிலையென நினைத்தால் பாடலும் , அந்த கிளைமாக்ஸ் பின்னணி இசையும் இன்றும் மறக்க முடியாது.
குறைந்த படங்களுக்கே இசை அமைத்திருந்தாலும் ( தமிழில் 12 , ஹிந்தியில் 4 ) அத்தனையும் ஹிட் .
உன்னை தினம் தேடும் தலைவன் , ராத்திரி நேரத்து பூஜையில் , சோதனை தீரவில்லை , அந்திநேர தென்றல் காற்று....
ஹிட் படங்கள் : தாய்நாடு , செந்தூர பூவே , உரிமை கீதம் , உழவன் மகன் , ஊமைவிழிகள் , இணைந்த கைகள்....
_________________________________________
வெண் பனி போல கண்களில் ஆடும்
மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிங்கே
களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும்
மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிங்கே
களங்கங்கள் இல்லை
அது தானே என்றும் இங்கே
நான் தேடும் எல்லை
‪#‎செந்தூர‬ பூவே இங்கு
தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும்
தேர் கொண்டு வா வா
இரு கரை மீதிலே
தன் நிலை மீறியே
ஒரு நதி போல
என் நெஞ்சம் அலை மோதுதே ...
_________________________________
படம் : செந்தூர பூவே
பாடியவர் : B.S.சசிரேகா, S.P.பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : முத்துலிங்கம்

சனி, 30 ஆகஸ்ட், 2014

தன்ராஜ் மாஸ்டர்

30 நாள் 30 இசை - நாள் 10


#தன்ராஜ் மாஸ்டர்

 


ஒரு படத்திற்கு கூட இசை அமைக்காத  தன்ராஜ் மாஸ்டரை தவிர்த்து விட்டு தமிழ் சினிமா இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறதா...
சென்னை மயிலாப்பூரை ( பூர்வீகம் தஞ்சாவூர் ) சேர்ந்த தன்ராஜ் மாஸ்டர் தமிழ் திரை இசையின் துரோணாச்சாரியார். வெஸ்டர்ன் கிளாசிகல் மியூசிக் எனப்படும் மேற்கத்திய இசை குரு.
இளையராஜா ,கங்கை அமரன் , AR ரஹ்மான் , தேவா , வித்யாசாகர் , மலையாள இசை அமைப்பாளர் ஷ்யாம் ... எல்லோரும் அவரின் பெருமைக்குரிய சீடர்கள்...
இவர்கள் அனைவரும் திரை இசைக்கான அடிப்படை பயிற்சி  , வெஸ்டர்ன் கிளாசிகல் இரண்டையும் தன்ராஜ் மாஸ்டரிடம் பயின்றார்கள். தன் முதன்மை சீடர் ராசையாவை ராஜா என்றே அழைத்தார். பிறகு அன்னகிளியின் போது பஞ்சு அருணாசலம் அவர்கள் இளையராஜா என மாற்றினார்.ரஹ்மான் இவரிடம் அடிப்படை இசை பயின்ற பிறகு லண்டன் ட்ரினிடி இசை பள்ளியில் மேல் படிப்பை படித்தார்.

இசை குறித்து இவர் எழுதியுள்ள இரண்டு நூல்கள் இன்று இசை பயிலும் அனைவருக்கும் பால பாடம் ஆகும். இசை விதி 180 டிகிரி ,  பிரம்ம மேள பிரமாணம்’ என்ற அந்த இரு நூல்கள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.

தன்ராஜ் மாஸ்டர் சார்பாக அவரின் சிஷ்யர் இளையராஜாவின் இசையில் இருந்து ஒரு பாடல் ..
_______________________________

 பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை

ஆசை கிளியே
வந்தாயே பண்ணோடு ...

நான் பிறந்த நாளில்
இது நல்ல நாளே ..

சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா ...

கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ ...இங்கு வந்ததாரோ

கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்

அது காற்றானதோ ... தூதானதோ... .
_____________________________________


படம் : கிழக்கே போகும் ரயில்
பாடல் : கண்ணதாசன்
பாடகர் : மலேசியா வாசுதேவன்,S .ஜானகி

T .ராஜேந்தர்

30 நாள் 30 இசை - நாள் 9


T .ராஜேந்தர் 

 


1980 ஆம் ஆண்டு ஒரு தலை ராகத்தில் இசை அமைப்பாளராக , இயக்குனராக , நடிகராக அறிமுகமான ராஜேந்தர் தமிழ் சினிமாவின் அஷ்டாவதானி . இயக்கம் ,நடிப்பு , பாடல் , இசை , நடனம் , உடைகள் , கலை , தயாரிப்பு .. எல்லாவற்றிலும் சாதித்தவர்..

இன்றைய 9 வது நாள் ஸ்பெசல் ராஜேந்தர். அவருக்கும் 9 ஸ்பெசல் தான். முதல் படம் ஒரு தலை ராகம் , கடைசியாக வந்த வீராசாமி தவிர எல்லா பட தலைப்புமே 9 எழுத்துக்களில் இருக்கும்.!

பாடலாசிரியர் ராஜேந்தர் இன்னும் ஸ்பெசல். கம்பனுக்கு இணையான கற்பனை இவர் பாடல்களில் இருக்கும் என்று BH.அப்துல் ஹமீது ஒரு முறை சொன்னார். இன்றைய பாடலை பாருங்கள் . காதலியின் கண்களை இதைவிட அழகாக யாராலும் வர்ணிக்க முடியாது. இன்றைக்கும் TR ஹிட்ஸ் CD விற்பனை ஆகிறது என்கிறார் CD கடை நண்பர்.

ஹிட்ஸ் : ஒரு தலை ராகம் , ரயில் பயணங்களில் , தங்கைக்கோர் கீதம் , மைதிலி என்னை காதலி , என் தங்கை கல்யாணி , ஒரு தாயின் சபதம் ....
____________________________________
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா..
அம்மம்மா

உன் மைவிழிக் குளத்தினில்
தவழ்வது மீனினமோ

கவி கண்டிட மனத்தினில்
கமழ்வது தமிழ்மணமோ

செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும்
உன் காந்த விழிகள்

ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட
ஏதேதோ குயில்கள்

மலையில் நெளியும் மேகக்குழல்கள்
தாகம் தீர்த்திடுமோ

பூவில் மோத பாதம் நோக
நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்

நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
__________________________________

படம் : ரயில் பயணங்களில்
பாடல் : ராஜேந்தர்
பாடகர் : ஜெயச்சந்திரன்

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஆதித்யன்

30 நாள் 30 இசை - நாள் 8


ஆதித்யன்

 

1992 ஆம் ஆண்டு அமரன் படத்தில் அறிமுகமான ஆதித்யன் அவர்களின் சொந்த ஊர் தஞ்சாவூர் . முதல் படத்திலேயே வித்தியாசமான இசை மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்த படத்தில் வெத்தல போட்ட சோக்குல என்ற கானா பாடலை கார்த்திக்கை பாடவைத்தார். பெரிய ஹிட் ஆனது.

50 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள ஆதித்யன் சில பாடல்களை பாடியுள்ளார். 2003 வரை இசை அமைத்த ஆதித்யன் அதன் பிறகு சமையல் கலை வல்லுனராக கலக்கினார். இன்றைக்கும் அவர் சமையல் நிகழ்ச்சிகளை யூ டியூபில் பார்க்கலாம்.

ஹிட் படங்கள் : அமரன் , சீவலப்பேரி பாண்டி , லக்கி மேன் , அசுரன் , மாமன் மகள் ....
__________________________________
அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு
ஏய் மலையே மலையே
மேகத்தை எடுத்து தாவணி நீ போடு

இந்த காடே என் வீடு
என் உறவே என் ஆடு
அட கண்ணீர் சந்தோசம்
அது ரெண்டும் என் பாடு

மழை வந்தாலென்ன
இடி வந்தாலென்ன
நீ துணிஞ்சு விளையாடு
துணிஞ்சு விளையாடு

ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு
________________________________

படம் : சீவலப்பேரி பாண்டி
பாடல் : கே . ராஜேஸ்வர்
பாடகர் : சித்ரா

புதன், 27 ஆகஸ்ட், 2014

சங்கர்‬ கணேஷ்

30 நாள் 30 இசை - நாள் 7

 

சங்கர்‬ கணேஷ்


1964 ஆம் ஆண்டு மகராசி மூலம் அறிமுகமான சங்கர் ,கணேஷ் ... MSV - ராமமூர்த்தி அவர்களுக்கு பிறகு சாதித்த இரட்டை இசை அமைப்பாளர்கள் . இந்திய அளவில் அதிக படங்களுக்கு இசை அமைத்து சாதனை படைத்தவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் ,ஹிந்தி என 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளனர். ராமநாராயணனின் இயக்கத்தில் மட்டும் 50 படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். 1979 இல் சிறந்த இசைக்கான தமிழக அரசு விருது பெற்றனர்.

கணேஷ் அவர்கள் கலைமாமணி விருது பெற்றுள்ளார். 7 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள கணேஷ் 2 படங்களை இயக்கியுள்ளார். கணேஷ் அவர்களைப் பார்த்தே இசை கற்று , இசை அமைப்பாளரானதாக ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.

ஹிட் லிஸ்ட் : ஆட்டுக்கார அலமேலு , டார்லிங் டார்லிங் டார்லிங் , கன்னி பருவத்திலே , எங்க சின்ன ராசா , ஊர் காவலன் , வாழ்க்கை சக்கரம் , நீயா ,விதி , சம்சாரம் அது மின்சாரம் , மூன்று முகம் ...
__________________________________________
அஞ்சு விரல் ஓயாம
கெஞ்சுகிற ஆச ஒண்ணு

பிஞ்சு இது தாங்காது
சொல்லிவிடு நோகுமுன்னு

தோதா அணைச்சபடி தாங்கிப் புடிப்பேன்
பட்டுச்சேலை கசங்காம பாடம் படிப்பேன்

அந்தியில பந்தி வைக்கும் போது
என்ன வரம் வேணுமின்னு கேளு
 அதற்குள்…தாகம் தணிஞ்சிரும்

மாமா‬ உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு

மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
____________________________________
படம் : எங்க சின்ன ராசா
பாடல் : வாலி
பாடகர் : SPB , S ஜானகி

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கங்கை அமரன்

30 நாள் 30 இசை - நாள் 6


கங்கை அமரன்


1979 இல் கே.பாக்யராஜின் ''சுவர் இல்லாத சித்திரங்கள்'' மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆன கங்கைஅமரன்.... இசை , பாடலாசிரியர் , இயக்குனர் , தயாரிப்பாளர் ,பாடகர் என தமிழ் திரையின் அனைத்து பகுதியிலும் முத்திரை பதித்து சாதனை புரிந்தவர். இளையராஜாவின் சகோதரர் . இயற் பெயர் அமர்.

''சுவர் இல்லாத சித்திரங்கள்'' முதல் 52 படங்களுக்கு இசை அமைப்பாளராக..... ''செந்தூர பூவே'' பாடல் (16 வயதினிலே) முதல் சுமார் 1000 பாடல்கள் பாடலாசிரியராக...
''கோழி கூவுது'' முதல் 22 படங்கள் இயக்குனராக .. கலக்கியவர் அமரன்.

இசை அமைத்த ஹிட் படங்கள் : சுவர் இல்லாத சித்திரங்கள் , நாளெல்லாம் பௌர்ணமி , வாழ்வே மாயம் , மௌன கீதங்கள் , ருத்ரா ....
________________________________

கூட்டாஞ்சோறு நீபோட
கும்மிப்போட்டு நான் பாட

சொல்லாம கிள்ளாத
வக்கீல் இல்ல வாதாட

வெக்கம் வந்து போராட
என்ன சொல்லி நான் பாட

சொந்தம்தான் மாறாது
ஊத்துத்தண்ணி ஆத்தோட

மோகத்த தூண்டாதீங்க
முந்தானை தாண்டாதீங்க

வாங்க அத வாங்க
எம்மடிமேல உக்காருங்க

நீதானா நெசந்தானா
நிக்கவச்சி நிக்கவச்சி பாக்குறே

ஆத்தாடி மடிதேடி
அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறே
__________________________________

படம் : நாளெல்லாம் பௌர்ணமி
பாடல் : கங்கை அமரன்
பாடகர் : யேசுதாஸ் , சித்ரா

SA ராஜ்குமார்

30 நாள் 30 இசை - நாள் 5


SA ராஜ்குமார்


1987 இல் சின்ன பூவே மெல்லப் பேசு படத்தின் மூலம் அறிமுகமான SA ராஜ்குமார் இன்று சரியாக 50 முடிந்து 51வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். (23.08.1964 ) . அவர் பிறந்த நாளில் அவரைப் பற்றிய பதிவை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பிறந்தது சென்னையில். பூர்வீகம் நெல்லை. அவரின் தந்தை செல்வராஜ் இளையராஜா இசைக்குழுவில் வாய்ப்பாட்டு கலைஞராக இருந்துள்ளார். அதன் தொடர்ச்சியோ என்னவோ குரல் மூலமே ( கோரஸ் ) பின்னணி இசை அமைப்பதில் வல்லவர் . லாலா லா ... போதும். எளிய மெல்லிசை பாடல்கள் அவர் பலம். இயக்குனர் விக்கிரமனுடன் இவர் இணைந்த எல்லா படங்களும் வெற்றி பெற்றன.

1997 இல் சூரிய வம்சம் படத்திற்காக தமிழக அரசு விருதும் , 1999 இல் ராஜா என்ற தெலுங்கு படத்திற்காக பிலிம்பேர் விருதும் பெற்றார்.

ஹிட் படங்கள் : பூவே உனக்காக , சூரிய வம்சம் , அவள் வருவாளா , உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் , துள்ளாத மனமும் துள்ளும் , வானத்தைப் போல , ஆனந்தம்..
_______________________________

ஜூலை மாதம் பூக்கும்
கொன்றைப் பூக்கள் போல

சேலை கொண்ட பெண்ணின்
அங்கம் தோற்றம் காட்டுதே

தாஜ்மகாலின் வண்ணம்
மாறக்கூடும் பெண்ணே

மேனி கொண்ட கன்னம்
மின்னும் வண்ணம் கூடுதே

நிறமுள்ள மலர்கள்
சோலைக்கு பெருமை

நீ உள்ள ஊரில்
வசிப்பது பெருமை

இருபது கோடி நிலவுகள்
கூடி பெண்மையானதோ

என் எதிரே வந்து
புன்னகை செய்ய கண் கூசுதோ..
_________________________________

படம் : துள்ளாத மனமும் துள்ளும்
பாடல் : வைரமுத்து
பாடகர் : ஹரிஹரன்

பரத்வாஜ்

30 நாள் 30 இசை - நாள் 4


பரத்வாஜ்


1998 இல் ''காதல் மன்னன்'' படத்தில் அறிமுகமான பரத்வாஜ் அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலி. CA பட்டதாரி . சிறுவயதிலேயே ஆல் இந்தியா ரேடியோ ,DD நிகழ்ச்சிகளுக்கு இசை அமைத்துள்ளார். இயக்குனர் சரண் மூலம் தமிழ் திரையில் நுழைந்தார்.

50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள பரத்வாஜின் முதலாவது ,25 வது ,50 வது படங்கள் அஜித் படங்கள் !.

2 முறை பிலிம்பேர் விருதும் , 2008 இல் கலைமாமணி விருதும் பெற்றார். இவர் இசையில் ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்காக கவிஞர் பா.விஜய் தேசிய விருது பெற்றார். அதே பாடலை பாடியதற்காக சித்ராவும் தேசிய விருது பெற்றார்.

திருக்குறளுக்கு இசை அமைக்கும் பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் அனைத்து பாடகர்களையும் பாட வைக்கிறார்.

ஹிட் படங்கள் : காதல் மன்னன் , அமர்க்களம் , பாண்டவர் பூமி , ரோஜா கூட்டம் ,ஜெமினி , வசூல்ராஜா MBBS , ஆட்டோகிராப் ....
_________________________________

காதலி மூச்சு விடும்
காற்றையும் சேகரிப்பேன்

காதலி மிச்சம் வைக்கும்
தேனீர் தீர்த்தம் என்பேன்

கடற்கரை மணலில் நமது
பேர்கள் எழுதி பார்ப்பேன்

அலை வந்து அள்ளிச் செல்ல
கடலைக் கொல்ல பார்ப்பேன்

உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன்
நான் வெயிலை வெட்ட பார்ப்பேன்

மொட்டுகளே மொட்டுகளே
மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகிறாள்
காலையில் மலருங்கள்

பொன்னரும்புகள் மலர்கயிலே
மென்மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால்
என் இதயம் தாங்காது .....
____________________________________

படம் : ரோஜா கூட்டம்
பாடல் : வைரமுத்து
பாடகர் : ஹரிஹரன் , சாதனா சர்க்கம்

தேனிசைத்தென்றல் தேவா

30 நாள் - 30 இசை - நாள் 3


தேனிசைத்தென்றல் தேவா


1989 ஆம் ஆண்டு மனசுக்கேத்த மகாராசா படத்தின் மூலம் அறிமுகமான தேவா ..MSV , இளையராஜாவிற்கு பிறகு அதிக படங்களுக்கு இசை அமைத்தவர். இவருக்கு தேனிசை தென்றல் என்ற பட்டத்தை வழங்கியது MS .விஸ்வநாதன் அவர்கள் . குறுகிய காலத்தில் அதிக படங்களுக்கு இசை அமைத்து சாதனை புரிந்தவர்.

3 முறை தமிழக அரசின் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது பெற்றுள்ளார்.1992 இல் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது. தற்போது தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற தலைவராக ஜெயலலிதா நியமித்துள்ளார்.

ஹிட் படங்கள் : அண்ணாமலை ,சூரியன் , ஆசை , பாட்ஷா , அவ்வை சண்முகி , காதல் கோட்டை , அருணாசலம் , நேருக்கு நேர் , வாலி ,குஷி , பஞ்ச தந்திரம் ...

_______________________________________

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...

நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே

என் காதலா... என் காதலா.....
நீ வா! நீ வா! என் காதலா...!

#மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா...

______________________________

படம் : நேருக்கு நேர்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகர் : ஹரிணி

சிற்பி

30 நாள் 30 இசை - நாள் 2


சிற்பி


1993 ஆம் ஆண்டு கோகுலம் படத்தின் மூலம் அறிமுகமாகி , முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர். 50 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.எளிமையான இசை இவரின் அடையாளம். சிந்தி மொழி பாடலின் சாயல் இருந்தது என கூறினாலும் ''உள்ளத்தை அள்ளித் தா'' பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

''உன்னை நினைத்து'' படத்திற்காக 2002 ஆம் ஆண்டின் சிறந்த இசைக்கான தமிழக அரசு விருது பெற்றார். 1997 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

முக்கிய படங்கள் : கோகுலம் , நான் பேச நினைப்பதெல்லாம் , நாட்டாமை , உள்ளத்தை அள்ளித்தா

________________________________________

கேட்காமல் காட்டும்
அன்பு உயர்வானது

கேட்டுக் கொடுத்தாலே
காதல் அங்கு உயிரானது

கேட்கும் கேள்விக்காகதானே
பதில் வாழுது

காதல் கேட்டு வாங்கும்
பொருளும் அல்ல இயல்பானது

நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல

காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல்
முகம் தன்னை மறைக்கும்

ஒருதலையாகவும்
சுகம் அனுபவிக்கும்

சுவாரஸ்யமானது காதல்
மிக மிக சுவாரஸ்யமானது காதல்...

___________________________________



படம் : கோடம்பாக்கம்
பாடலாசிரியர்: விஜய் சாகர்
பாடியவர்கள் : ஹரிணி , ஹரிஷ் ராகவேந்திரா

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

வித்யாசாகர்

30 நாள் - 30 இசை - நாள் 1


வித்யாசாகர்


1989 ஆம் ஆண்டு பூமணம் என்ற தமிழ் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான வித்யாசாகர் தமிழ் , மலையாளம் , தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி மொழிகளில் 250 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். மனதை வருடும் பல மெல்லிசை பாடல்களை தந்தவர்.

2005 ஆம் ஆண்டு ஸ்வரபிஷேகம் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த இசைக்கான தேசிய விருது பெற்றார். சிறந்த பண்பாளரான வித்யாசாகரோடு இசைப் பயணம் இனிதே தொடங்குகிறது.

முக்கிய படங்கள் : கர்ணா, தில் ,ரன் , கில்லி , அன்பே சிவம் , சந்திரமுகி , பார்த்திபன் கனவு, பூவெல்லாம் உன் வாசம் , மொழி ...

--------------------------------------------------------

பாதி ஜீவன் கொண்டு
தேகம் வாழ்ந்து வந்ததோ

மீதி ஜீவன் உன்னை
பார்த்த போது வந்ததோ

ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே

ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா

மலரே மௌனமா
மலர்கள் பேசுமா

மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே...
----------------------------------------------

படம் : கர்ணா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்